#BREAKING : ஆக்சிஜன் உற்பத்திக்கு தொடர்ந்து அனுமதி வழங்க வேண்டும்..! உச்சநீதிமன்றத்தில் வேதாந்தா மனு..!
வேதாந்தா நிறுவனம் ஆக்சிஜன் உற்பத்திக்கு தொடர்ந்து அனுமதி வழங்க வேண்டும் என்று உச்சநீதிமனறத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்த நிலையில், இந்த காலகட்டங்களில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாக பலர் உயிரிழந்தனர். இதனையடுத்து, ஆக்சிஜன் தட்டுப்பாடுகளை போக்க பல்வேறு தனியார் அமைப்புகள் ஆக்சிஜன் உற்பத்தி செய்து வழங்கி வந்தது.
ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் ஆக்சிஜனை உற்பத்தி செய்து இலவசமாக தர தயாராக இருப்பதாகவும் அதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று மத்திய மாநில அரசுகளுக்கு கடிதம் அனுப்பியது. இதனையடுத்து. உச்ச நீதிமன்றம் ஆக்சிஜன் தேவையை கருத்தில் கொண்டு ஆக்சிஜன் தயாரிப்புக்கு ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி அளித்தது. மேலும் இந்த ஆக்சிஜன் தயாரிப்பை கண்காணிக்க மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஒரு குழுவை அமைத்தது.
கடந்த மே 5-ஆம் தேதி முதல் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கப்பட்டது. இந்நிலையில், வரும் ஜூலை 31-ஆம் தேதியுடன் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திக்கு உச்சநீதிமன்றம் அளித்துள்ள அனுமதி முடிவடைகிறது.
இந்நிலையில், வேதாந்தா நிறுவனம் ஆக்சிஜன் உற்பத்திக்கு தொடர்ந்து அனுமதி வழங்க வேண்டும் என்று உச்சநீதிமனறத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. இதனையடுத்து, வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் அடுத்த வெள்ளிக்கிழமைக்கு விசாரணைக்கு வருகிறது.