குடியரசு தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா அறிவிப்பு.
குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் சரத்பவார் தலைமையிலான எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில் ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹாவை களமிறக்க அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒருமனதாக ஒப்புக்கொண்டன என காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெயராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடுவதற்காக, இன்று முன்னதாகவே திரிணாமுல் காங்கிரஸ் துணைத்தலைவர் பதவியில் இருந்து யஷ்வந்த் சின்கா ராஜினாமா செய்திருந்தார். நாட்டின் தேவையை கருத்தில் கொண்டு கட்சியில் இருந்து விலகியதாக ட்விட்டரில் யஷ்வந்த் சின்கா பதிவிட்டிருந்தார். இதனிடையே, ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக போட்டியிட சரத் பவார் மற்றும் பாரூக் அப்துல்லா மறுத்துவிட்ட நிலையில், தற்போது எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா அறிவிக்கப்பட்டுள்ளார்.
1998 – 2004 வாஜ்பாஜ் அமைச்சரவையில் வெளியுறவு, நிதி உள்ளிட்ட துறைகளின் அமைச்சராக பதவி வகித்த யஷ்வந்த் சின்ஹா, 2018-ம் ஆண்டு பாஜகவில் இருந்து விலகியதை அடுத்து கடந்தாண்டு திரிணாமுல் காங்கிரசில் இணைந்தார். இந்த நிலையில், வரும் ஜூலை 18-ம் தேதி நடைபெற உள்ள குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா போட்டியிட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் மிதமானது முதல் கனமழை…
டெல்லி : ஜார்கண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தல் முதற்கட்ட வாக்குப்பதிவு தற்போது தொடங்கியுள்ளது. அங்கு மொத்தமுள்ள 81 தொகுதிகளில் 15…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. அதேநேரம், வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்த…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி ஆங்காங்கே பெய்து வருகிறது. அதேநேரம், வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு…
சீனா : ஜுஹாய் நகரில் உள்ள விளையாட்டு மையத்தில் தினமும் பலர் உடற்பயிற்சி செய்து வருவது வழக்கம். அப்படி தான்…
சென்னை : வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் சில மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக ஏற்கனவே, வானிலை…