#BREAKING : கேரளாவில் மேலும் ஒருவருக்கு குரங்கு அம்மை – அமைச்சர் வீணா ஜார்ஜ்
கேரளாவில் மேலும் ஒருவருக்கு குரங்கு அம்மை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கமே இன்னும் தணியாத நிலையில், தற்போது குரங்கு அம்மை என்ற நோய் பல நாடுகளில் பரவி வருகிறது.
இந்த நிலையில், இந்தியாவில், கேரள மாநிலத்தில் ஏற்கனவே 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். இதனால் அங்கு குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3-ஆக அதிகரித்துள்ளது.