#BREAKING: கேரளாவில் மேலும் ஒருவருக்கு குரங்கு அம்மை தொற்று உறுதி!
கேரளாவில் ஏற்கனவே ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதியான நிலையில், மேலும் ஒருவருக்கு பாதிப்பு.
கேரளாவின் மேலும் ஒருவருக்கு குரங்கு அம்மை தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரளாவில் கண்ணூர் மாவட்டத்தில் ஒருவருக்கு குரங்கு அம்மை நோய் தொற்று இருப்பதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தகவல் தெரிவித்துள்ளார். குரங்கு அம்மை உறுதியான 31 வயதான நபர் அண்மையில் துபாயில் இருந்து கேரளா திரும்பியவர் என தெரிவிக்கப்படுகிறது.
இந்தியாவில் முதல் குரங்கு அம்மை தொற்று கேரளாவில் கண்டறியப்பட்ட நிலையில், இராணுவது நபருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் (UAE) இருந்து கடந்த 12-ஆம் தேதி திரும்பிய கேரள நபருக்கு குரங்கு காய்ச்சலின் அறிகுறி இருப்பது உறுதி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.