#BREAKING: ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் ஆகஸ்ட்க்குள் அமல் – மத்திய அரசு அறிவிப்பு.!
ஒரே நாடு ஒரே ரேசன் கார்டு திட்டம் ஆகஸ்ட் மாதத்துக்குள் 83% அமல்படுத்தப்படும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
மக்கள் தங்களது பகுதியில் செயல்படும் நியாய விலைக்கடைகளில் மட்டுமே ரேஷன் பொருட்களை வாங்கி வருகின்றனர். இந்த நிலையை மாற்ற ஒரே நாடு ஒரே ரேஷன் என்ற திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இந்த திட்டம் மூலம் நாட்டு மக்கள் அனைவரும் ரேஷன் கார்டு மூலம் எந்த நியாய விலை கடைகளிலும் ரேஷன் பொருட்களை பெற்றுக்கொள்ளமுடியும்.
இந்நிலையில், வெளிமாநில தொழிலாளர்கள் நாட்டில் உள்ள எந்த ரேசன் கடையிலும் பொருட்களை வாங்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. ஒரே நாடு ஒரே ரேசன் கார்டு திட்டம் வருகின்ற ஆகஸ்ட் மாதத்திற்குள் 83% அமல்படுத்தப்படும். 83% அமல்படுத்தப்படுவதால் 23 மாநிலங்களின் 67 கோடி குடும்பங்கள் ஒரே நாடு ஒரே ரேசன் கார்டு திட்டத்தின் மூலம் பயன் பெறுவார்கள் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
மேலும், நாடு முழுவதும் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் ஒரே நாடு ஒரே ரேசன் கார்டு திட்டம் அமல்படுத்ததப்படும் என அறிவித்துள்ளார்.