#Breaking:ஒமைக்ரான் பாதிப்பு 422 ஆக உயர்வு – மத்திய சுகாதாரத்துறை தகவல்!
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,987 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இறப்பு எண்ணிக்கை 162 ஆக பதிவாகியுள்ளது.இதுவரையிலும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,47,86,802 ஆக உள்ளது.மேலும்,நாடு முழுவதும் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 415 ஆக உயர்வு.
இது தொடர்பாக,மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
- கடந்த 24 மணி நேரத்தில் 6,987 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இது நேற்றைய பாதிப்பை விட 200 குறைவு.கொரோனாவால் நாடு முழுவதும் இதுவரை 3,47,86,802 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
- கடந்த 24 மணி நேரத்தில் இறப்பு எண்ணிக்கை 162 ஆக பதிவாகியுள்ளது. இதுவரை இந்தியாவில் 4,79,682 பேர் உயிரிழந்துள்ளனர்.
- தொற்றில் இருந்து ஒரே நாளில் 7,091 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை இந்தியாவில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,42,30,354 ஆக உயர்ந்துள்ளது.
- இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவர்களின் எண்ணிக்கை 76,766 ஆக உள்ளது.
- நாடு முழுவதும் இதுவரை 1,41,37,72,425 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் 32,90,766 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
- மேலும்,நாடு முழுவதும் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 422 ஆக உயர்ந்துள்ளதாகவும்,அதில் 130 பேர் குணமடைந்து விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.