#Breaking:ஒமைக்ரான் பாதிப்பு 1431 ஆக உயர்வு – மத்திய சுகாதாரத்துறை தகவல் !
இந்தியாவில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1431 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல்.
நாடு முழுவதும் ஒமைக்ரான் வகை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1431 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
அதிகபட்சமாக,மகாராஷ்டிராவில் 454,டெல்லியில் 351,தமிழ்நாட்டில் 118 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும்,ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 488 பேர் குணமடைந்துவிட்டனர் என்றும்,943 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
எனினும்,தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு ஒமைக்ரான் பாதிப்பு பெரிய அளவில் இல்லை என்றும் அவர்கள் விரைவில் வீடு திரும்புகிறார்கள் என்றும் சுகாதாரத்துறை கூறியுள்ளது.