புதுச்சேரி சட்டப்பேரவை துணை சபாநாயகர் பதவிக்கு என்.ஆர்.காங்கிரஸ் எம்எல்ஏ ராஜவேலு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
புதுச்சேரி சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடர் வரும் 26-ம் தேதி கூடுகிறது.அப்போது கவர்னர் உரை இடம்பெறும். தொடர்ந்து பிற்பகலில் துணை சபாநாயகர் தேர்தல் நடைபெறும் என்று சபாநாயகர் செல்வம் முன்னதாக அறிவித்தார்.
இதனையடுத்து,புதுச்சேரி சட்டப்பேரவை துணை சபாநாயகர் பதவிக்கான வேட்புமனு தாக்கல் இன்று நண்பகலுடன் முடிவடையும் நிலையில், துணை சபாநாயகர் பதவிக்கு என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் எம்எல்ஏ ராஜவேலு இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.சபாநாயகர் பதவி பாஜகவுக்கு தரப்பட்டுள்ளதால்,துணை சபாநாயகர் பதவிக்கு என்.ஆர்.காங்கிரஸ் போட்டியிட்டது.
இந்நிலையில்,துணை சபாநாயகர் பதவிக்கு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாத நிலையில்,என்.ஆர்.காங்கிரஸ் எம்எல்ஏ ராஜவேலு நெட்டப்பாக்கம் (எஸ்சி) தொகுதியில் இருந்து போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.நாளை துணை சபாநாயகராக பதவியேற்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
புனே : இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி கைப்பற்றிவிட்டது. நேற்று மகாராஷ்டிரா மாநிலம் புனே கிரிக்கெட்…
சென்னை : மத்திய பட்ஜெட் 2025 – 2026-ஐ இன்று நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில், தமிழகத்திற்கு…
சென்னை : மத்திய பட்ஜெட் 2025 – 2026-ஐ இன்று நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில், தமிழகத்திற்கு…
கேரளா : மத்திய பட்ஜெட் 2025 – 2026-ஐ இன்று நாடாளுமன்றத்தில்நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில், வருமானவரி…
சென்னை : கடைசியாக தனது சொந்த இயக்கத்தில் "ராயன்" படத்தில் நடித்த நடிகர் தனுஷ் தற்போது 'நிலவுக்கு என்மேல் என்னடி…
டெல்லி : ஆண்டு தோறும் மத்திய அரசு பட்ஜெட் தாக்கல் செய்யும் நாளில், பொதுவாக பங்குச்சந்தை பரபரப்பாக இருக்கும் என்பது அனைவர்க்கும்…