#BREAKING: பெகாசஸ் நிறுவனத்துடன் எந்த வர்த்தகமும் நடைபெறவில்லை – மத்திய அரசு விளக்கம்

பெகாசஸ் உளவு மென்பொருளை செயல்படுத்தும் என்.எஸ்.ஓ. நிறுவனத்துடன் எந்த வர்த்தகமும் நடக்கவில்லை என மத்திய அரசு விளக்கம்.
இஸ்ரேலில் உள்ள பெகாசஸ் உளவு மென்பொருளை செயல்படுத்தும் என்.எஸ்.ஓ. நிறுவனத்துடன் எந்த வர்த்தகமும் நடைபெறவில்லை என்று நாடாளுமன்ற மாநிலங்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினரின் கேள்விக்கு மத்திய பாதுகாப்பு அமைச்சகம் விளக்கமளித்துள்ளது.
இதனிடைய எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து இந்த மழைக்கால கூட்டத்தொடரில் பெகாசஸ் உளவு விவகாரம் தொடர்பாக விவாதிக்க வேண்டுமென அமளியில் ஈடுபடுவதும், இதனால் அவை ஒத்திவைக்கப்படுவதும் நடைபெற்று வரும் சூழலில், என்.எஸ்.ஓ. நிறுவனத்துடன் எந்த வர்த்தகமும் நடக்கவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
வசூலில் சக்கை போடு… ரூ.100 கோடி கிளப்பில் இணைந்த GBU.!
April 15, 2025
சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்.!
April 15, 2025