தமிழ்நாட்டை இரண்டாக பிரிக்கும் திட்டம் இல்லை என்று மத்திய உள்துறை இணையமைச்சர் நித்தியானந்த் ராய் விளக்கமளித்துள்ளார்.
சமீபத்தில்,தமிழ்நாட்டை இரண்டாக பிரித்து கொங்குநாடு உருவாக்கப்படும் என்ற சர்ச்சை கிளம்பி அரசியல் கட்சிகள் மத்தியில் பல எதிர்ப்புகள் உருவாயின.
இந்நிலையில்,தமிழ்நாட்டை பிரிக்கும் ஏதேனும் திட்டம் இருக்கிறதா?,இதன் உண்மைத்தன்மை என்ன? என்று மக்களவை எம்பிக்கள் பாரிவேந்தர், ராமலிங்கம் ஆகியோர் எழுத்து பூர்வமாக முன்வைத்த கேள்வி எழுப்பினர்.
இதற்கு,பதிலளித்துள்ள மத்திய உள்துறை இணையமைச்சர் நித்தியானந்த் ராய்,தமிழ்நாட்டை இரண்டாக பிரிக்கும் திட்டம் தற்போது பரிசீலனையில் இல்லை.மேலும்,கொங்குநாடு என்ற புதிய மாநிலத்தை உருவாக்குவது தொடர்பான எந்த திட்டமும் இல்லை என்று தெளிவாக விளக்கமளித்துள்ளார்.
மத்திய அரசு இவ்வாறு விளக்கம் அளித்துள்ளதால்,தமிழ்நாட்டை இரண்டாகப் பிரிக்கும் திட்டம் தொடர்பான சர்ச்சை முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டெல்லி : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் இன்று தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நேற்று…
சென்னை : தமிழகத்தில், தென் மாவட்டங்களில் கனமழையின் காரணத்தால் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் விடுமுறை அறிவித்துள்ளனர். மேலும், திருநெல்வேலி,…
தூத்துக்குடி : தமிழகத்தில், கடந்த சில நாட்களாகவே டெல்டா, தென்மாவட்டங்களில் இருக்கும் இடங்களில் கனமழை விட்டுவிட்டு பெய்து வருகிறது. அதில்,…
திருநெல்வேலி : தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் ஒரு சில இடமும் மற்றும் தென்மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கடந்த சில…
டெல்லி : ஐபிஎல் போட்டிகளில் டெல்லி அணியைச் சிறப்பாக வழிநடத்தி வந்த ரிஷப் பண்டை அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல்…
கோவை : கல்லாபட்டி, , சேரன்மா நகர், நேரு நகர், சித்ரா,, வள்ளியம்பாளையம், , கே.ஆர்.பாளையம், வில்லங்குறிச்சி, தண்ணீர்பந்தல், பீளமேடு…