தமிழக அரசின் 50% இடஒதுக்கீடு விவகாரத்தில், இந்தாண்டு மருத்துவர்களுக்கு சலுகை கிடையாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு.
தமிழ்நாட்டில் உயர் சிறப்பு மருத்துவ படிப்புகளில், தொலைதூர பகுதிகளிலும், ஊரகப் பகுதிகளிலும் பணியாற்றும் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்த நிலையில், மத்திய அரசு 2000வது ஆண்டின் மருத்துவ மேற்படிப்பு விதிகளை காரணம் காட்டி ஒதுக்கீட்டை ரத்து செய்தது.
இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி உத்தரவு பிறப்பித்தது. அதன் அடிப்படையில் மருத்துவ உயர் சிறப்பு படிப்புகளில் உள் ஒதுக்கீடு வழங்கி, தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. மத்திய அரசு மற்றும் சில மருத்துவர்கள் சார்பில், உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்தும், அரசாணையை ரத்து செய்ய கோரியும் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.
உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி, சிறப்பு மருத்துவ மேற்படிப்பு உள்ளிட்ட மருத்துவ மேற்படிப்புகளில் இந்த ஆண்டு 50% இடஒதுக்கீடு இல்லை என தீர்ப்பளித்துள்ளது.
சென்னை : சென்னை தென்மேற்கு மாவட்டக்கழக செயலாளர் - சட்டமன்ற உறுப்பினர் மையிலாபூர் எம்.எல்.ஏ த.வேலுவின் மகள் அனுஷா -…
சென்னை : சந்தானம் நடிப்பில் 2016-ல் வெளியான தில்லுக்கு துட்டு படம் ஹிட்டானதை தொடர்ந்து அதே பாணியில் தில்லுக்கு துட்டு…
தர்மபுரி : இன்று தர்மபுரியில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த…
தருமபுரி : தேமுதிகவின் இளைஞரணி செயலாளராக விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரன் நியமிக்கப்பட்டுள்ளார். பிரேமலதாவின் வசம் இருந்த பொருளாளர்…
கொல்கத்தா : மேற்கு வங்காளத்தின் தலைநகரான கொல்கத்தாவில் உள்ள ஒரு ஹோட்டலில் பயங்கர தீ ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில்…
நீலகிரி : மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கு விலையின்றி வீடு வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 20 அடுக்குமாடி குடியிருப்புகளை…