#BREAKING: நீட் தேர்வுக்கு தடையில்லை – 7 மாநில அரசுகளின் சீராய்வு மனுக்கள் தள்ளுபடி.!
நீட் தேர்வுக்கு எதிராக 7 மாநிலங்கள் தொடர்ந்த சீராய்வு மனுக்களை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
நீட் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்று பல்வேறு அரசியல் காட்சிகள் கோரிக்கைகள் விடுத்தது வந்தனர். சமீபத்தில், உச்சநீதிமன்றத்தில் நீட் தேர்வை தள்ளி வைக்க கோரிய வழக்கில் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது. இதனையடுத்து, நீட்தேர்வை தள்ளிவைக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவை பரிசீலனை செய்ய கோரி மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், மகாராஷ்டிரா பஞ்சாப் ராஜஸ்தான் மற்றும் புதுச்சேரி ஆகிய 7 மாநில அரசுகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்தனர்.
இந்த சீராய்வு மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் இன்று விசாணைக்கு வந்தபோது, புதுச்சேரி கொறடா அனந்தராமன், 6 மாநிலங்களின் அமைச்சர்கள் தொடுத்த சீராய்வு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. மனுக்களை விசாரிக்க முகாந்திரம் இல்லை கூறி, சீராய்வு மனுக்களை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம். இந்த சீராய்வு மனுக்களை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்ததால், வரும் 13-ஆம் தேதி திட்டமிட்டபடி நீட் தேர்வு நடைபெறும் என்பது குறிப்பிடப்படுகிறது.