2023-24-ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மக்களவையில் தாக்கல் செய்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உரை.
2023-24-ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்வது இது 5-ஆவது முறையாகும். தற்போதைய நாடாளுமன்ற கூட்டத்தில் தாக்கல் செய்யப்படும் கடைசி பட்ஜெட்டாகும். சுதந்திரத்தின் 75-ஆவது ஆண்டில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பட்ஜெட் தாக்கல் செய்த பின் பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், கடந்த பட்ஜெட்டுகள் அமைத்த அடித்தளத்தின் மீது கட்டப்படும் பட்ஜெட் ஆக இது அமையும். அனைவருக்கும் பயன் அளிக்கும் வகையிலான வளர்ச்சியை உருவாக்கும் வகையில் பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகள், பெண்கள் உள்பட அனைவருக்கும் பயனளிக்கும் வகையில் பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்திய பொருளாதாரம் சிறப்பாக உள்ளது என உலகமே அங்கீகரித்துள்ளது. இந்தியாவின் சாதனைகளை உலகமே பாராட்டுவதால் தலைநிமிர்ந்து பட்ஜெட் தாக்கல் செய்கிறேன். கொரோனா காலத்தில் யாரும் பட்டினியில் இருக்கக்கூடாது என்பதற்காக திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன என கூறினார்.
மேலும், 2023 ஜனவரி 1 முதல் மேலும் ஓராண்டுக்கு அத்தியோதயா திட்டத்தின் கீழ் உணவு தானியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் 28 மாதங்களில் 80 கோடி மக்களுக்கு உணவு, தானியங்கள் வழங்கப்பட்டன என்றும் 7 முக்கிய அம்சங்கள் அடங்கியதாக இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.
சென்னை: கிழக்கு இலங்கைக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…
டெல்லி: 2025 ஐபிஎல் தொடர், மார்ச் 23ம் தேதி தொடங்கும் என பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.…
துபாய்: சில நாட்களுக்கு முன்பு, அஜித் கார் விபத்தில் சிக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. தற்போது, இணையதளம் முழுவதும்…
ஈரோடு: காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதிக்கு…
துபாய்: நடிகர் அஜித் குமார் சினிமாவை அடுத்து பைக், கார் பந்தயங்களில் அதீத ஈடுபாடு கொண்டவர். தற்போது துபாயில் நடைபெறும்…
சென்னை: வழக்கமாக ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையோடு தொடங்குவது வழக்கம். தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 6ம் தேதி…