#Breaking: நிர்பயா குற்றவாளிகளுக்கு வரும் 20ம் தேதி தூக்கு – நீதிமன்றம் அதிரடி உத்தரவு

நிர்பயா குற்றவாளிகள் 4 பேருக்கு வரும் 20ம் தேதி காலை 5.30 மணிக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்ற டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நிர்பயா குற்றவாளிகளுக்கு மூன்று முறை தூக்கு தண்டனை நிறுத்திவைக்கப்பட்ட நிலையில், நான்காவது முறையாக தூக்கு தண்டனை தேதியை அறிவித்தது டெல்லி பாட்டியாலா நீதிமன்றம். கருணை மனுக்களை குடியரசு தலைவர் நிராகரித்து விட்டதால், முகேஷ் சிங், வினய் ஷர்மா, பவன் குப்தா, அக்சய் குமார் சிங் ஆகிய 4 குற்றவாளிகளை தூக்கில் போடுவது உறுதியானது. இதனிடையே திகார் சிறை நிர்வாகம் தாக்கல் செய்த மனுவை விசாரித்த டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?. எப்போது வருகிறது தெரியுமா?
December 19, 2024
பாஜக எம்பியை தள்ளிவிட்ட விவகாரம் : “எல்லாம் கேமிராவில் இருக்கு” ராகுல் காந்தி விளக்கம்!
December 19, 2024
“ராகுல் காந்தியால் நான் கிழே விழுந்தேன்.” பாஜக எம்பி பரபரப்பு பேட்டி!
December 19, 2024