சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு பெண்களை அனுமதித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.இந்நிலையில் மலைக்கு செல்லும் பெண்களுக்கு பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
நேற்று முந்தினம் இந்த விவகாரத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது . பெண்களே இந்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில் கேரளா சபரிமலைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன்ஆந்திர பெண் பத்திரிகையாளர் உட்பட 2 பெண்களும் சபரிமலை சன்னிதானத்தை நெருங்கியுள்ளனர்.
இதுவரை எந்த பெண்களும் சபரிமலை கோயில் உள்ளே செல்லவில்லை என பத்தனம்திட்டா ஆட்சியர் கூறியிருந்த நிலையில், பம்பையில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆந்திர பெண் பத்திரிகையாளர் உட்பட 2 பெண்கள் பயணம் மேற்கொண்டுள்ளனர்.பலத்த போலீஸ் பாதுகாப்புடன் செல்லும் ஆந்திர பெண் பத்திரிகையாளர் உட்பட 2 பெண்களும் சபரிமலை ஐயப்பன் சன்னிதானத்தை நெருங்கினர்.
இந்நிலையில் ஆந்திர பெண் செய்தி வாசிப்பாளர் கவிதா உட்பட்ட 2 பெண்கள் இருமுடி கட்டி சபரிமலை ஐயப்பன் கோவில் சன்னிதானத்தை நோக்கி பயணம்மேற்கொண்டார். பெண் செய்தி வாசிப்பாளர் கவிதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பக்தர்கள் முழக்கம் எழுப்பி வருகின்றனர்.
சபரிமலை சன்னிதானத்தின் கீழ்ப்பகுதியான நடைப்பந்தலை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் செல்லும் ஆந்திர பத்திரிகையாளர் மற்றும் இருமுடி கட்டிய பெண் பக்தர் ஒருவரும் அடைந்தனர்.
இந்நிலையில் ஐஜி ஸ்ரீஜித் தலைமையில் 150 அதிரடிப்படை வீரர்கள் பாதுகாப்புடன் பம்பையில் இருந்து சபரிமலை சென்ற 2 பெண்கள் ஐயப்பன் கோவில் சன்னிதானத்தை நெருங்கிய நிலையில் 2 பெண்களையும் அனுமதிக்கமாட்டோம் என்று சபரிமலைக்கு அப்பெண்கள் வர எதிர்ப்பு தெரிவித்து சன்னிதானம் முன்பு ஐயப்ப பக்தர்கள் அமர்ந்து போராட்டம் போராட்டத்தை நடத்திவருகின்றனர்.
ஐயப்ப பக்தர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்நிலையில்போராட்டக்காரர்கள் உள்ளே நுழைய கூடாது வழக்கத்தை எதிர்த்து அனுமதிக்க மாட்டோம் ‘சுவாமியே ஐயப்போ……முழக்கங்களை எழுப்பி வருகின்றனர் இந்நிலையில் பதற்றமான சூழ்நிலை சபரிமலை நிலைவிவருகிறது.
DINASUVADU
சென்னை: பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் சாட்டையடி போராட்டம் நடத்தியது போல், நேற்று மாலை நடிகர் கூல் சுரேஷ் தனக்கு…
ஜப்பான்: சுசூகி மோட்டார்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஒசாமு சுசூகி (94) காலமானார். லிம்போமா என்ற ஒருவகை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட…
சென்னை: கேப்டன் என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் 'விஜயகாந்த்' மறைந்து இன்றுடன் ஓராண்டாகிறது. மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் முதலாம்…
டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நல குறைவு காரணமாக, நேற்று முன்தினம் காலமானார். இப்பொது மறைந்த மன்மோகன் சிங்…
டெல்லி : எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நல குறைவு காரணமாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,…
வதோதரா : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி0 போட்டிகள், 3 ஒரு…