Breaking News:ஸ்டெர்லைட் ஆலை வழக்கு…!உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு …!

Default Image

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்கக் கூடாது என்ற தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்தது உச்சநீதிமன்றம்  .

ஸ்டெர்லைட் போராட்டம்: 

  • தூத்துக்குடியில் வேதாந்த நிறுவனத்துக்கு சொந்தமான ஸ்டெர்லைட் ஆலையை ஏற்படும் பாதிப்பால் தூத்துக்குடி மக்கள் போராட்டம் நடத்தினர்.மே 22ஆம் தேதி நடந்த போராட்டத்தில் காவல்துறை நடத்திய தூப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர்.அதைத் தொடர்ந்து தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை மூட அரசாணை  வெளியிட்டது.

தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு விசாரணை: 

  • பின்  தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதற்கு எதிராக  வேதாந்தா நிறுவனம் தொடுத்த வழக்கு விசாரணை டிசம்பர் 10 ஆம் தேதி நடைபெற்றது.

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு:

 

  • டிசம்பர் 15 ஆம் தேதி தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்து தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்தது.அதேபோல் தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்து தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்தது. ஆலைக்கு தேவையான மின்சார வசதியை உடனடியாக கொடுக்க வேண்டும். தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் புதிய வழிமுறைகளை அளிக்கவும் தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்தது.
  • அதேபோல் 3 வாரத்தில் ஆலையை திறக்க அனுமதி வழங்க தமிழக மாசுகட்டுப்பாட்டு வாரியத்திற்கு உத்தரவு  பிறப்பித்தது. ஆலையில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகளை கண்காணிப்பதற்கு குழு அமைக்க வேண்டும் என்றும் தெரிவித்தது.

வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு:

  • பின் ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் தொடர்பாக வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்தது.அந்த மனுவில் பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்தால் தங்கள் தரப்பை கேட்க வேண்டும்.தங்களது வாதத்தை கேட்காமல் எந்த உத்தரவையும் பிறப்பிக்க வேண்டாம்.

ஸ்டெர்லைட் விவகாரத்தில் தற்போதைய நிலையே தொடர உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு:

Image result for sterlite

  • ஸ்டெர்லைட் வழக்கில் தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து  உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் முறையீடு செய்யப்பட்டது.உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தூத்துக்குடியை சேர்ந்த பாத்திமா தரப்பில் அவரது வழக்கறிஞர் ஹென்றி டிபேன் முறையீடு செய்தார் . மனுவாக தாக்கல் செய்தால் விசாரிப்பதாக நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு அறிவிப்பு வெளியிட்டனர்.
  • பின் வழக்கு விசாரணைக்கு உகந்தது என பாத்திமா பாபு தொடர்ந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றது உயர்நீதிமன்ற மதுரை கிளை.
  • பின்  ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது.ஸ்டெர்லைட் விவகாரத்தில் தற்போதைய நிலையே தொடர உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.மேலும் ஸ்டெர்லைட் விவகாரத்தில் தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவை செயல்படுத்த  தடை விதித்தது.
  • வழக்கில் தமிழக தலைமைச் செயலாளர், வேதாந்தா நிறுவனத்துக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை நோட்டீஸ் அனுப்ப உத்தரவு பிறப்பித்துள்ளது. பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யும் திட்டம் உள்ளதா என அரசு பதிலளிக்க ஆணை பிறப்பித்துள்ளது.மேலும் வழக்கை ஜனவரி 21 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது  உயர்நீதிமன்ற மதுரை கிளை.

உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பிறப்பித்த உத்தரவை ரத்துசெய்ய வேண்டும் என்று ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் மேல்முறையீடு:

  • இந்த உத்தரவை எதிர்த்து  ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. மேல்முறையீய்டு செய்த அந்த மனுவில் தேசிய பசுமை தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மட்டுமே மேல்முறையீடு செய்ய முடியும் என்று கூறிய அந்த மனுவில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பிறப்பித்த உத்தரவை ரத்துசெய்ய வேண்டும் என்று ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் மேல்முறையீடு செய்த மனுவில் தெரிவிக்கப்பட்டது.

உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு:

  •  ஜனவரி 2 ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலையை திறக்கும் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவிற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது . மேலும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம் என்ற பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று மனுவில் தெரிவித்தது.
  • இந்நிலையில் ஆலையை திறக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் ஆலை தாக்கல் செய்த மனு மீது வரும் 8ஆம் தேதி விசாரணை நடைபெறுகிறது.ஆலையை திறக்க உயர்நீதிமன்றக் கிளை தடை விதித்தநிலையில் மேல்முறையீட்டு மனு அவசர வழக்காக விசாரிக்கப்பட உள்ளது.
  • அதேபோல்  ஸ்டெர்லைட் ஆலைக்குஎதிரான தமிழகஅரசின் மனுவை  இன்று (ஜனவரி  8 ஆம் தேதி) விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்.தமிழக  அரசின் மேல்முறையீட்டு மனுவும்,ஆலை நிர்வாகத்தின் மனுவும் ஒன்றாக சேர்த்து விசாரிக்கப்படும் என்று  உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
  • இந்நிலையில் இன்று விசாரித்த உச்சநீதிமன்றம்  ஆலையை திறக்க அனுமதிக்கக் கூடாது என்ற தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்தது.
  • ஆலையை திறக்க தடை விதித்த உயர்நீதிமன்றக்கிளையின் உத்தரவு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

live
Trump - Zelensky
Dhanush - Nayanthara
Shardul Takur
Rain Update
nayanthara and dhanush
PM Modi - Yogi Adhithyanath