#Breaking News :கர்நாடக காங்கிரஸ் அமைச்சர்கள் அனைவரும் கூண்டோடு ராஜினாமா
கர்நாடக காங்கிரஸ் அமைச்சர்கள் அனைவரும் கூண்டோடு ராஜினாமா செய்துள்ளனர்.
கர்நாடக அரசியலில் கடந்த சில நாட்களாக பரபரப்பாக காணப்பட்டு வருகிறது.அதற்கு முக்கிய காரணம் ஆளும் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தள எம்எல்ஏக்கள் அளித்த ராஜினாமா கடிதம் தான் ஆகும்.இதனால் ஆளும் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தள அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது.
இந்த நிலையில் கர்நாடகாவில் ஏற்கனவே 13 எல்எல்ஏக்கள், ஒரு அமைச்சர் ராஜினாமா செய்த நிலையில், தற்போது அனைத்து அமைச்சர்களும் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். ராஜினாமா கடிதத்தை, காங்கிரஸ் சட்டசபை குழு தலைவர் சித்தராமையாவிடம் அளித்தனர்.ராஜினாமா செய்த எல்எல்ஏக்களுக்கு பதவி வழங்கி ராஜினாமாவை திரும்பப்பெற செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.