முக்கிய அறிவிப்பு..! சபரிமலையில் 4 மணி நேரம் நடை மூடல்..!
சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோவிலில் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக ஆண்டு தோறும் 60 நாள்கள் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும்.இந்த ஆண்டு ஐயப்பன் கோவிலின் நடை மண்டல பூஜைகாக கடந்த 16-ம் தேதி திறக்கப்பட்டு டிசம்பர் 27-ம் தேதி நடைமூட உள்ளனர்.
பின்னர் மகரவிளக்கு பூஜைக்காக கோவில் டிசம்பர் 30-ம் தேதி திறக்கப்பட்டு ஜனவரி 15-ம் தேதி வரை நடை திறந்து இருக்கும்.இந்நிலையில் வருகின்ற டிசம்பர் 26-ம் தேதி காலை 08.07 முதல் 11.13 வரை சூரியகிரகணம் என்பதால் வழக்கமாக நடைபெறும் நெய் அபிஷேகம் அன்று காலை 07.30 நிறுத்தப்பட்டு காலை 11.30 வரை நடை மூடப்படவுள்ளனர்.
பின்னர் சூரிய கிரகண தோஷ நிவரத்தி பூஜை செய்து திறக்கப்பட உள்ளது.அந்த நேரத்தில் பம்பாவில் இருந்து சன்னிதானம் எந்த பக்தர்களும் அனுமதிக்கப்படமாட்டார்கள் என கூறப்பட்டு உள்ளது.