ஹைதராபாத்தில் தனியார் விடுதியில் தங்கியிருந்த எம்.எல்.ஏக்கள் 2 பேருந்துகளில் பெங்களூரு வந்தடைந்தனர்.
இன்று மாலை 4 மணியளவில்,உச்சநீதிமன்ற உத்தரவின்படி, கர்நாடக சட்டப்பேரவையில் எடியூரப்பா நம்பிக்கை வாக்கெடுப்பு கோருகிறார். 104 எம்.எல்.ஏக்களைக் கொண்ட பாஜகவுக்கு, பெரும்பான்மையை நிரூபிக்க எட்டு இடங்கள் தேவைப்படுகின்றன.
கர்நாடகாவில் தேர்தலுக்கு பின்னர் கூட்டணி அமைத்த காங்கிரசிற்கும், மதசார்பற்ற ஜனதா தளத்திற்கு ஆட்சி அமைக்க வாய்ப்பு கொடுக்க மறுத்த ஆளுநரின் செயலுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. நேற்று இந்த வழக்கை விசாரித்த ஏ.கே.சிக்ரி, எஸ்.ஏ.போப்டே, அசோக் பூஷண் ஆகியோர் அடங்கிய அமர்வு, இன்று மாலை 4 மணிக்கு எடியூரப்பா நம்பிக்கை வாக்கெடுப்பு கோர வேண்டும் என்றும், தற்காலிக சபாநாயகர் இதற்கான வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டது. ரகசிய வாக்கெடுப்பு நடத்தக் கூடாது என்றும், வாக்கெடுப்பு முறை குறித்து தற்காலிக சபாநாயகர் தீர்மானிப்பார் என்று நீதிபதி சிக்ரி கூறினார்.
இந்நிலையில், இன்று காலை 11 மணிக்கு சட்டப்பேரவை கூட்டப்பட்டு, புதிய எம்.எல்.ஏக்கள் பதவியேற்க உள்ளனர். அவர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க தற்காலிக சபாநாயகராக கே.ஜி.போப்பையாவை ஆளுநர் வஜூபாய் வாலா நியமனம் செய்துள்ளார்.
2011ஆம் ஆண்டில் சபாநாயகராக இருந்த போப்பையா, எடியூரப்பாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய 11 எம்எல்ஏ.க்களை தகுதிநீக்கம் செய்ததன் மூலம் ஆட்சியைக் காப்பாற்றியவர் ஆவார். அவையின் மூத்த உறுப்பினரே தற்காலிக சபாநாயகராக நியமிக்கப்பட வேண்டும் என்ற நெறிமுறைக்கு மாறாக போப்பையா நியமிக்கப்பட்டிருப்பதாக காங்கிரஸ் புகார் கூறியுள்ளது .இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு, இன்று காலை 10.30 மணிக்கு விசாரணைக்கு வருகிறது.
எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்றபின், மாலை 4 மணிக்கு சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது. 112 எம்.எல்.ஏக்களின் ஆதரவு இருந்தால் மட்டுமே எடியூரப்பா அரசு தப்பும். பாஜகவுக்கு 104 எம்.எல்.ஏக்கள் மட்டுமே உள்ள நிலையில், எதிர் அணியில் இருந்து 8 பேர் கட்சி அவருக்கு ஆதரவு அளிக்க வேண்டும். அல்லது 15 எம்.எல்.ஏக்கள் சட்டமன்றத்திற்கு வராமல் தவிர்த்துவிட்டாலும் எடியூரப்பா அரசுக்கு ஆபத்து நீங்கும்.
காங்கிரஸ், மதச்சார்பற்ற எம்எல்ஏக்கள் சிலர் தங்களுடன்தான் இருப்பதாகவும், அவர்கள் ஆதரவின்றி தாங்கள் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாதல்லவா? என்றும் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் கர்நாடகாவில் பாஜக குதிரை பேரத்தில் ஈடுபட்டால், அதை தடுக்கும் முயற்சியாக காங்கிரஸ், மஜத எம்எல்ஏக்கள் அனைவரும் ஹைதராபாத்தில் உள்ள நட்சத்திர ஓட்டல்களில் நேற்று தங்க வைக்கப்பட்டனர்.
தற்போது ஹைதராபாத்தில் தனியார் விடுதியில் தங்கியிருந்த எம்.எல்.ஏக்கள் 2 பேருந்துகளில் பெங்களூரு வந்தடைந்தனர்.பெங்களூரு தனியார் விடுதியில் காங்கிரஸ், ம.ஜ.த கட்சி எம்.எல்.ஏக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
டெல்லி : எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நல குறைவு காரணமாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,…
வதோதரா : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி0 போட்டிகள், 3 ஒரு…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த…
தூத்துக்குடி : சென்னையில் உள்ள அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில்…
சென்னை :முளைக்கட்டிய பச்சைபயிறு முட்டை மசாலா செய்வது எப்படி இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்; முளைகட்டிய பச்சைப்பயிறு-…
இலங்கை : தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததால் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர், மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை…