BREAKING NEWS: இரண்டு MLA க்கள் கடத்தல் கர்நாடகாவில் பரபரப்பு..!
மதசார்பற்ற ஜனதாதள இரண்டு MLA க்கள் கடத்தப்பட்டுள்ளதாக ஜனதாதள முதலமைச்சர் வேட்பாளர் குமாரசாமி பேட்டி…
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராய்ச்சூர் எம்.எல்.ஏ விடம் ஜனார்த்தனரெட்டி ரூ150 கோடி பேரம் பேசிய ஆடியோவை வெளியிட்டது காங்கிரஸ் கட்சி.காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராய்ச்சூர் எம்.எல்.ஏ விடம் ஜனார்த்தனரெட்டி ரூ150 கோடி பேரம் பேசிய ஆடியோவை வெளியிட்டது காங்கிரஸ் கட்சி.
முன்னதாக எம்.எல்.ஏக்கள் ஈகிள்டன் விடுதியில் இருந்து புறப்பட இருந்த நிலையில் மாலையில் விடுதியைச் சுற்றி போடப்பட்டிருந்த போலீஸ் பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டது.
போலீசார் விலகியதும் பாஜகவின் தரகர்கள் விடுதிக்குள் புகுந்து காங்கிரஸ் எம்.எல்.ஏக்களுக்கு பண ஆசை காட்டி வலை விரித்ததாகவும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் இருப்பதாகவும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராமலிங்க ரெட்டி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
மேலும் இரவோடு இரவாக மதசார்பற்ற ஜனதா தளம் எம்.எல்.ஏக்கள் ஹைதரபாத், கொச்சிக்கும்,கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் புதுச்சேரிக்கும் அழைத்துச் செல்லப்பட்டதாக தகவல் வெளியானது.
கர்நாடக சட்டப்பேரவையில் பெரும்பான்மையை எடியூரப்பா நிரூபிக்க வேண்டியுள்ள நிலையில் கண்ணாமூச்சி ஆட்டம் தொடங்கி விட்டது. எம்.எல்.ஏக்கள் விலை போய்விடாமல் பாதுகாப்பாக வைத்திருக்க காங்கிரசும் மதசார்பற்ற ஜனதா தளமும் கொச்சிக்கு விமானத்தில் அழைத்துச் செல்ல திட்டமிட்டனர்.
ஆனால் அதற்கு மாறாக காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகளைச் சேர்ந்த கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள், தெலங்கானாவில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் தற்போது செய்தியாளர்களை ஜனதாதள முதல்வர் வேட்பாளர் குமாரசாமி செய்தியாளர்களை சந்திக்கும் போது கூறியதாவது ;
காங் ,மதசார்பற்ற ஜனதாதள MLA க்கள் 117பேர் கொண்ட பட்டியலை ஆளுநரிடம் அளித்துள்ளோம். பாஜக எங்கள் MLA க்களிடம் விலை பேசி வருகிறது
மேலும் அவர் கூறுகையில் எங்கள் MLA க்கள் இரண்டு பேரை பாஜக வினர் கடத்தி உள்ளனர் அவர்கள் மீண்டும் வருவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது…