பெங்களூரு ஹோட்டலில் காங்கிரஸ் எம்எல்ஏ ஆனந்த் சிங் இருப்பதாக அக்கட்சியினர் புகார் கூறினர்.
தற்காலிக சபாநாயகர் போப்பையா தலைமையில் சட்டப்பேரவை கூடியது:
காலை 11 மணியளவில், தற்காலிக சபாநாயகர் போப்பையா தலைமையில் சட்டப்பேரவை கூடியது. முதலமைச்சர் எடியூரப்பா, முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா உள்ளிட்டோர் எம்எல்ஏ.க்களாக பதவியேற்றுக்கொண்டனர்.
தற்காலிக சபாநாயகர் போப்பையா, எம்எல்ஏ.க்களுக்கு வரிசையாக பதவிப் பிரமாணம் செய்து வைத்து வருகிறார். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏ.க்கள் ஆனந்த் சிங், பிரதாப் கவுடா பாட்டீல் ஆகிய இருவரும் இதுவரை கர்நாடக சட்டப்பேரவைக்கு வரவில்லை. எம்எல்ஏ.க்கள் பதவியேற்பு நிகழ்ச்சி முடிந்த பிறகு மாலை 4 மணியளவில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.
புதிதாக தேர்வு செய்யப்பட்ட எம்எல்ஏ.க்கள்,கர்நாடக சட்டப்பேரவையில் பதவியேற்றனர். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 2 எம்எல்ஏ.க்கள் இதுவரை அவைக்கு வரவில்லை.
மாயமான காங். எம்எல்ஏக்கள் ஆனந்த் சிங், பிரதாப் கவுடா கோல்ட்:
இந்நிலையில் மாயமான காங். எம்எல்ஏக்கள் ஆனந்த் சிங், பிரதாப் கவுடா கோல்ட் பின்ச் ஓட்டலில் தங்கி இருப்பதாக கிடைத்த தகவலின்பேரில், காவல்துறை ஓட்டலுக்கு விரைந்தனர் .
பெங்களூரு ஹோட்டலில் காங்கிரஸ் எம்எல்ஏ ஆனந்த் சிங்:
பெங்களூரு ஹோட்டலில் காங்கிரஸ் எம்எல்ஏ ஆனந்த் சிங் இருப்பதாக அக்கட்சியினர் புகார் கூறினர். அவரை பாஜகவினர் அடைத்து வைத்திருப்பதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர். இதையடுத்து அந்த ஹோட்டலைச் சுற்றி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. அங்கு எம்எல்ஏ இருக்கிறாரா? என காவல்துறை டிஜிபி சோதனை நடத்தினார். இந்த பரபரப்புக்கு இடையே எம்எல்ஏ ஆனந்த் சிங் அந்த ஹோட்டலில் இருந்து காரில் புறப்பட்டு வெளியே சென்றார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : சீமான் தலைமையில் 2010ஆம் ஆண்டு மே மாதம் ஆரம்பிக்கப்பட்ட கட்சி 'நாம் தமிழர் கட்சி'. அப்போது முதல்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை நடிகர் விஜய் தொடங்கி வரும் பிப்ரவரி மாதத்தோடு ஓராண்டு நிறைவு…
டெல்லி : விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை ஸ்பேஸ் டாக்கிங் (Space Docking) செயல்முறை மூலம் இணைக்கும் நோக்கத்திற்காக ஸ்ரீஹரிகோட்டாவில்…
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம் நடந்தது.…
மதுரை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது…
சீனா : கார் ஒட்டிக்கொண்டு சாலையில் வேகமாக செல்லும் போது சில சமயங்களில், சாலைகளில் இருக்கும் மேடு பள்ளங்களை கவனிக்காமல்…