BREAKING NEWS:பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாள் அவகாசம் ரொம்ப ஓவர்!கர்நாடக முதல்வர் எடியூரப்பா
பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாள் அவகாசம் தேவையில்லை’ பெங்களூருவில் பாஜக தலைமை அலுவலகத்தில் கர்நாடக முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
மேலும் கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா ,கர்நாடக சட்டப்பேரவையில் விரைவில் பெரும்பான்மையை நிரூபிக்க உள்ளதாகவும், அதற்கு ஒன்றிரண்டு நாட்கள் காத்திருக்குமாறும் தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலத்தின் 23ஆவது முதல்வராக பதவியேற்ற எடியூரப்பா, விவசாயிகளின் 56 ஆயிரம் கோடி ரூபாய் அளவுள்ள வங்கிகடன்களை தள்ளுபடி செய்யும் கோப்பில் முதல் கையெழுத்திட்டு பணியை தொடங்கினார். இதன்மூலம் விவசாயிகள் வங்கிகளில் வாங்கிய 5 ஆயிரம் ரூபாய் முதல் 1 லட்சம் ரூபாய் வரையிலான விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எடியூரப்பா, சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூப்பிக்க உள்ளதாகவும், அதில், 100 சதவிகிதம் வெற்றி பெற இருப்பதாகவும் கூறினார்.
சட்டப்பேரவையை கூட்டி பெரும்பான்மை நிரூபிக்கும் தேதியை தெரிந்து கொள்ள ஒன்றிரண்டு நாட்கள் பொறுத்திருக்குமாறும் எடியூரப்பா கேட்டுக் கொண்டார். காங்கிரசும், மதச்சார்பற்ற ஜனதா தளமும், அறநெறிகளுக்கு அப்பாற்பட்டு கெட்ட கூட்டணி அமைத்திருப்பதாக எடியூரப்பா கூறினார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.