BREAKING NEWS:பதவியேற்பு நிகழ்ச்சியில் 3 லட்சம் பேர் பங்கேற்பு!ஆபரேஷன் தாமரைக்கும் நாங்கள் ரெடி!குமாரசாமி
கர்நாடக ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் குமாரசாமி.ஆளுநர் சந்திப்பிற்கு பின் குமாரசாமி கூறியது:
மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் குமாரசாமி செய்தியாளர் சந்திப்பு:
இது குறித்து மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் குமாரசாமி கூறுகையில், ஆட்சியமைக்க வருமாறு ஆளுநர் அழைத்துள்ளார்.திங்களன்று பதவியேற்க ஆளுநர் அழைப்புவிடுத்துள்ளார். ஆட்சியமைக்க வருமாறு ஆளுநர் அழைத்துள்ளார். காங்கிரஸ், ம.ஜ.த. கூட்டணியை ஆட்சியமைக்க வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
கந்தீரவா ஸ்டேடியத்தில் திங்களன்று முதலமைச்சராகப் பதவியேற்கவுள்ளேன்.மேலும் பாஜகவால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியவில்லை.ஆபரேஷன் தாமரைக்கும் நாங்கள் தயாராக உள்ளோம்.நிலையான ஆட்சியைத் தருவோம் என்ற நம்பிக்கை உள்ளது.எங்கள் எம்எல்ஏக்களைப் பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்தோம்.இன்று இரவு 8.30 மணிக்கு காங்கிரஸ், ம.ஜ.த. ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.மே 21ஆம் தேதி நான் முதல்வராக பதவியேற்கும் விழாவில் பங்கேற்க சோனியா, ராகுல் காந்திக்கு அழைப்பு விடுத்துள்ளேன்.பதவியேற்பு நிகழ்ச்சியில் 2 லட்சம் முதல் 3 லட்சம் பேர் வருவார்கள் என எதிர்பார்க்கப்டுகிறது. நீதித்துறையையும், அதன் முடிவையும் தனிப்பட்ட முறையில் பாராட்டுகிறேன் என்று மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் குமாரசாமி தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.