BREAKING NEWS:பஞ்சாப் அல்லது கேரளாவிற்கு பறக்கும் காங். எம்எல்ஏக்கள்!ஈகிள்டன் விடுதிக்கு டாட்டா!

Default Image

கர்நாடகாவில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தங்கியுள்ள ஈகிள்டன் விடுதிக்கான போலீஸ் பாதுகாப்பை நீக்கியது கர்நாடக அரசு.

கர்நாடகாவின் பாஜக பலம் 104 தொகுதிகள் மட்டுமே. ஆனால் 15 நாட்களுக்குள் எடியூரப்பா பெரும்பான்மையை நிரூபித்தாக வேண்டும். அப்படியானல் அவருக்கு எம்எல்ஏக்கள் பலம் 113 வேண்டும். இல்லையென்றால் அவர்களின் ஆட்சி கவிழ்ந்துவிடும். இந்த நேரத்தில் ஆட்சியை தக்க வைக்க, பெரும்பான்மையை நிரூபிக்கும் பொருட்டு பாஜக, காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தள கட்சி எம்எல்ஏக்களை தங்கள் பக்கம் இழுக்க விலைக்கு வாங்க முயற்சிக்கலாம். பதவி தருகிறோம். அந்தஸ்து தருகிறோம் என அவர்கள் ஆசைவார்த்தைகள் காட்டலாம். இத்தகைய செயலே குதிரை பேரம் என சொல்லப்படுகிறது. அதேசமயம் தங்கள் தரப்பு எம்எல்ஏக்களை காக்கும்பொருட்டு காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் தங்கள் கட்சி எம்எல்ஏக்களை சொகுசு விடுதியில்தங்கவைத்துள்ளது.

இந்நிலையில் கர்நாடகாவில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தங்கியுள்ள ஈகிள்டன் விடுதிக்கான போலீஸ் பாதுகாப்பை நீக்கியது காவல் துறை.இந்நிலையில் கர்நாடக அரசு எம்எல்ஏக்களை தற்போது பஞ்சாப் அல்லது கேரளாவிற்கு இடமாற்றம் செய்ய காங். திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்