காங்கிரஸ், மஜத கட்சிகள் சார்பாக கபில் சிபல், அபிஷேக் சிங்வி ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்.கர்நாடக அரசு தரப்பு வழக்கறிஞர் துஷார் மேத்தாதரப்பில் வழக்கறிஞர் முகுல் ரோத்தஹி ஆஜரானார்.
காங்- மஜத வழக்கறிஞர் வாதம்:
நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த காங்கிரஸ்- மஜத தயார் என்றும் கால தாமதமின்றி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்றும் காங்- மஜத வழக்கறிஞர் தெரிவித்துள்ளனர்.
பெரும்பான்மையை நாளையே நிரூபிக்க தயார் என உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ் தரப்பு வாதம் செய்துள்ளது.சட்டப்பேரவையில் நடக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பை வீடியோ பதவி செய்ய வேண்டும் எம்.எல்.ஏக்கள் அச்சமின்றி வாக்களிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் காங்- மஜத வழக்கறிஞர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும்; ஆனால் முதலில் யாருக்கு வாய்ப்பு என்பது தான் பிரச்னை” என்று காங்கிரஸ் வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி வாதிட்டார்.
பெரும்பான்மையை நிரூபிக்க யாரை முதலில் அழைக்க வேண்டும் என்ற கேள்வி எழுந்துள்ளது என்றும் காங். வழக்கறிஞர் சிங்வி கூறினார்.மேலும் காங்கிரஸ், ம.ஜ.த. கட்சிகளை முதலில் அழைக்க வேண்டும்” என்றும் அபிஷேக் சிங்வி வாதத்தில் தெரிவித்தார்.
நம்பிக்கை வாக்கெடுப்பு கோர எங்களுக்குதான் முதலில் வாய்ப்பு தர வேண்டும் என்று காங்கிரஸ்- மஜத வழக்கறிஞர்கள் கபில் சிபல், அபிஷேக் சிங்வி கோரிக்கை விடுத்தனர் .
எடியூரப்பாவை ஆட்சியமைக்க ஆளுநர் அழைத்தது தன்னிச்சையான முடிவு யாரை ஆட்சியமைக்க அழைக்க வேண்டும் என முடிவு செய்யும் சுதந்திரம் ஆளுநருக்கு இல்லை. ஆட்சியமைக்க அழைக்கும் விவகாரத்தில் மரபுகள், நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று வழக்கறிஞர் கபில்சிபில் தெரிவித்துள்ளார்.
எடியூரப்பாவை ஆட்சியமைக்க ஆளுநர் அழைத்தது தன்னிச்சையான முடிவு என்றும் உச்சநீதிமன்ற வழக்கறிஞர் கபில்சிபில் தெரிவித்துள்ளார்.
எடியூரப்பா தரப்பில் வழக்கறிஞர் முகுல் ரோத்தஹி ஆஜர்:
எடியூரப்பா தரப்பில் வழக்கறிஞர் முகுல் ரோத்தஹி ஆஜரானார்.ஆளுநருக்கு எடியூரப்பா எழுதிய கடிதங்களை தாக்கல் செய்தார், முகுல் ரோத்தஹி.
ஆளுநரின் முடிவுக்கு எதிராக தம்மையும் ஒரு வாதியாக சேர்க்குமாறு ராம் ஜெத்மலானி கோரிக்கை,தேவைப்படும் போது சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிப்போம் என்றும் தெரிவித்துள்ளார். எடியூரப்பாவுக்கு போதுமான எம்எல்ஏக்கள் ஆதரவு உள்ளது என்றும், எடியூரப்பா தனது கடிதத்தில் ஆதரவு எம்எல்ஏக்கள் குறித்த பட்டியலை குறிப்பிடவில்லை என்று பாஜக வழக்கறிஞர் முகுல் ரோத்தஹி கூறியுள்ளார்..
காங்கிரஸ் மற்றும் ம.ஜ.த எம்எல்ஏக்களில் சிலர் கூட பாஜகவுக்கு ஆதரவளிப்பார்கள் என்று பாஜக வழக்கறிஞர் முகுல் ரோத்தஹி தெரிவித்துள்ளார்.பாஜகவை ஆதரிக்கும் எம்.எல்.ஏக்களின் பெயரை வெளியிட முடியாது என உச்சநீதிமன்றத்தில் பாஜக வழக்கறிஞர் வாதிட்டார்.
குமாரசாமிக்கு ஆதரவாக காங். மற்றும் ம.ஜ.த எம்.எல்.ஏக்கள் கையெழுத்திட்ட கடிதம் ஆளுநரிடம் அளிக்கப்படவில்லை” என்று கர்நாடக அரசு தரப்பு வழக்கறிஞர் துஷார் மேத்தா வாதத்தில் தெரிவித்தார்.
உச்சநீதிமன்றம் தீர்ப்பு:
நம்பிக்கை வாக்கெடுப்பு கோர யாரை முதலில் அனுமதிப்பது என்பதுதான் கேள்வி பெரும்பான்மையை பேரவையில்தான் நிரூப்பிக்க வேண்டுமே தவிர நீதிமன்றத்தில் இல்லை என்றும் நம்பிக்கை வாக்கெடுப்பு கோர யாரை முதலில் அனுமதிப்பது என்பதுதான் கேள்வி பெரும்பான்மையை பேரவையில்தான் நிரூப்பிக்க வேண்டுமே தவிர நீதிமன்றத்தில் இல்லை என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பெரும்பான்மை இருப்பதாக காங்- மஜத கூறிய நிலையில் பாஜகவை மட்டும் ஆளுநர் அழைத்தது ஏன்? காங்கிரஸ்- மஜத தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதி சிக்ரி பாஜக தரப்பு வழக்கறிஞருக்கு கேள்வி எழுப்பியுள்ளனர்.
ஆளுநரை கேள்வி கேட்பதை விட நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவது தான் சரியாக இருக்கும் என்றும் “104 இடங்கள் மட்டுமே வென்ற பாஜகவை எதன் அடிப்படையில் ஆட்சி அமைக்க ஆளுநர் அழைத்தார்?”என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
நாளை கர்நாடக சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தினால் நல்லது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கர்நாடக பேரவையில் நாளையே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிடலாமா?மேலும் பெரும்பான்மையை நிரூபிக்கத் தயாரா? என்று உச்சநீதிமன்ற நீதிபதி அர்ஜன் குமார் சிக்ரி கேள்வி எழுப்பியுள்ளனர்.
தற்போதைய சூழலில் கர்நாடக சட்டப்பேரவையில் நாளையே நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுவதே சரியாக இருக்கும் என்று உச்சநீதிமன்றம் கருத்து.
நம்பிக்கை வாக்கெடுப்பே சிறந்த முடிவாகும் என்று உச்ச நீதிமன்ற நீதிபதி அர்ஜன் குமார் சிக்ரி தெரிவித்துள்ளார்.
நம்பிக்கை வாக்கெடுப்பை நாளையே நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் இருவர் கருத்து
நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை கர்நாடக டி.ஜி.பி மேற்கொள்ள வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அனைத்து எம்எல்ஏக்களும் சட்டப்பேரவைக்கு வந்து வாக்களிக்க பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்று உச்சநீதிமன்றம் உறுதியளித்துள்ளது.
இந்த வழக்கை விசாரிக்கும் முன் காலம் சென்று விடும் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
அனைத்து எம்எல்ஏக்களும் சட்டப்பேரவைக்கு வந்து வாக்களிக்க பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யலாமா? என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா பெரும்பான்மையை நிரூபிக்க சட்டப்பேரவையில் நாளை மாலை 4 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கர்நாடக சட்டப்பேரவையில் நாளையே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவு பிறபித்துள்ளது.
இதேபோல் பெரும்பான்மையை நிரூபிக்க திங்கள் வரை அவகாசம் கேட்ட எடியூரப்பா தரப்பு கோரிக்கை நிராகரிபக்கபட்டது. பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் 15 நாள் அவகாசம் தந்த நிலையில் உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டது.மேலும் நம்பிக்கை வாக்கெடுப்பு முடியும்வரை ஆங்கிலோ இந்தியன் நியமன எம்.எல்.ஏக்களை ஆளுநர் நியமிக்க கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
திருநெல்வேலி: நெல்லை மாவட்ட நீதிமன்ற வளாகம் முன்பு, வழக்கு விசாரணைக்கு வந்த இளைஞர் ஒருவரை 4 பேர் கொண்ட கும்பல்…
சென்னை: மத்திய மேற்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 12 மணி நேரத்தில் மேலும் வலுப்பெற…
சென்னை :நெல்லிக்காய் குல்கந்து தித்திக்கும் சுவையில் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; நெல்லிக்காய்…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, இந்த வார தொடக்கத்தில் இருந்தே சரிந்த வண்ணம் உள்ளது. சொல்லப்போனால், கடந்த மூன்று…
சென்னை: சென்னையில் இருந்து கும்மிடிப்பூண்டி செல்லும் ரயில்கள் திடீரென எண்ணூரில் நிறுத்தப்பட்டது. இதனால், சென்னை - கும்மிடிப்பூண்டி மார்க்கத்தின் ரயில்…
கோவை : காந்திபுரம், சித்தாபுதூர், டாடாபாத், ஆவாரம்பாளையம் பகுதி, மேட்டுப்பாளையம் சாலை, சர்க்யூட் ஹவுஸ், விமானப்படை, சுக்ரவார்பேட்டை, மரக்கடை, ராம்நகர்,…