நாளை அல்லது நாளை மறுநாள் வரை பொறுத்திருங்கள் என்று கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.மேலும் அவர் பெரும்பான்மையை நிரூபிப்போம், தேர்தலில் அளித்த வாக்குறுதியின் படி விவசாய கடன்களை தள்ளுபடி செய்துள்ளேன் என்று கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் ரூ.56000 கோடி விவசாய கடன் தள்ளுபடி செய்து முதலமைச்சர் எடியூரப்பா முதல் கையெழுத்திட்டுள்ளார்.
இது பதவி ஏற்ற பின் முதலமைச்சர் எடியூரப்பா முதல் கையெழுத்திட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆளுநர் மாளிகையில் பதவியேற்ற எடியூரப்பா தலைமை செயலகம் வந்து முதலமைச்சர் பணியை தொடங்கினார்.இதில் கர்நாடகாவில் ரூ.56000 கோடி விவசாய கடன் தள்ளுபடி செய்து முதலமைச்சர் எடியூரப்பா முதல் கையெழுத்திட்டுள்ளார். இந்நிலையில் பாஜக எம்.எல்.ஏக்களுடன் பிற்பகல் 3 மணிக்கு ஆலோசனை நடத்துகிறார் முதலமைச்சர் எடியூரப்பா.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தும் நிலையில் பேரவைக்கு வந்தார் எடியூரப்பா பேரவையில் வாயிற்படியை தொட்டு வணங்கி உள்ளே சென்றார் எடியூரப்பா.
சற்று முன்தான் கர்நாடகாவின் 23-வது முதலமைச்சராக பதவியேற்றார் எடியூரப்பா.
கர்நாடகா மாநில முதலமைச்சராக எடியூரப்பா பதவியேற்றார். ஆளுநர் வஜூபாய் வாலா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.லிங்காயத் சமூகத்தை சேர்ந்த பாஜகவின் எடியூரப்பா 3 வது முறையாக கர்நாடக முதலமைச்சராகியுள்ளார் எடியூரப்பா.ஆனால் கர்நாடகத்தில் எடியூரப்பாவுடன் அமைச்சர்கள் யாரும் பதவியேற்கவில்லை.
இந்நிலையில் கர்நாடக சட்டப்பேரவையில் பாஜக பெரும்பான்மையை நிரூபிக்கும் என்று மத்திய அமைச்சர் அனந்தகுமார் தெரிவித்துள்ளார்.
இதேபோல் பதவியேற்பு விழாவில் மத்திய அமைச்சர்கள் ஜே.பி.நட்டா, தர்மேந்திர பிரதான், பிரகாஷ் ஜவடேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை: கிழக்கு இலங்கைக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…
டெல்லி: 2025 ஐபிஎல் தொடர், மார்ச் 23ம் தேதி தொடங்கும் என பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.…
துபாய்: சில நாட்களுக்கு முன்பு, அஜித் கார் விபத்தில் சிக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. தற்போது, இணையதளம் முழுவதும்…
ஈரோடு: காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதிக்கு…
துபாய்: நடிகர் அஜித் குமார் சினிமாவை அடுத்து பைக், கார் பந்தயங்களில் அதீத ஈடுபாடு கொண்டவர். தற்போது துபாயில் நடைபெறும்…
சென்னை: வழக்கமாக ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையோடு தொடங்குவது வழக்கம். தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 6ம் தேதி…