கர்நாடக சட்டப்பேரவையில் முதலமைச்சர் குமாரசாமி தலைமையிலான அரசு இன்று மாலை நம்பிக்கை வாக்கெடுப்பு கோருகிறது. ஆயினும் 5 ஆண்டுகளுக்கு குமாரசாமியை ஆதரிப்பதாக காங்கிரஸ் கட்சி எந்த வாக்குறுதியும் அளிக்கவில்லை என்று துணை முதலமைச்சர் பரமேஸ்வரா தெரிவித்துள்ளார்.
கர்நாடக அரசியலில் நேரிட்ட பரபரப்பான திருப்பங்களுக்கிடையே குமாரசாமி தலைமையிலான அரசு சட்டப்பேரவையில் இன்று பெரும்பான்மையை நிரூபிக்க உள்ளது. அரசைக் கவிழ்க்க பாஜகவினர் ஆபரேசன் கமலம் என்ற பெயரில் சதித்திட்டம் தீட்டி வருவதாக குமாரசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
எம்.எல்.ஏக்களிடம் குதிரை பேரம் நடைபெறக் கூடும் என்ற அச்சத்தால், மதசார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் பெங்களூரின் ஹில்டன் போன்ற நட்சத்திர விடுதிகளில் பலத்த பாதுகாப்புடன் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 12 மணிக்கு சபாநாயகரைத் தேர்வு செய்ய உறுப்பினர்கள் வாக்களிப்பார்கள்.
இந்நிலையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க காங்கிரஸ்-மஜத சட்டமன்ற உறுப்பினர்கள் சொகுசு பேருந்து முலம் கர்நாடக சட்டப்பேரவைக்கு வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்
டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…