BREAKING NEWS:சபரிமலைக்குள் நுழைந்த 2 பெண்களையும்……….திருப்பி அனுப்புங்கள்……… தேவசம் அதிரடி உத்தரவு…..!!
சபரிமலை கோவிலுக்குள் செல்ல செய்தியாளர்கள், சமூக ஆர்வலர்களுக்கு அனுமதியில்லை என்று தேவசம் போர்டு அதிரடி உத்தரவிட்டுள்ளது.
கேரளா பலத்த போலீஸ் பாதுகாப்புடன் செல்லும் ஆந்திர பெண் பத்திரிகையாளர் உட்பட 2 பெண்களும் சபரிமலை சன்னிதானத்தை நெருங்கி பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.இந்நிலையில் சபரிமலை சன்னிதானத்தின் கீழ்ப்பகுதியான நடைப்பந்தலை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் செல்லும் ஆந்திர பத்திரிகையாளர் மற்றும் இருமுடி கட்டிய பெண் பக்தர் ஒருவரும் அடைந்தனர்.
பெண்கள் வர எதிர்ப்பு தெரிவித்து, சன்னிதானம் அருகே ஐயப்ப பக்தர்கள் சரண கோஷ முழங்கி சபரிமலைக்கு அப்பெண்கள் வர எதிர்ப்பு தெரிவித்து சன்னிதானம் முன்பு ஐயப்ப பக்தர்கள் அமர்ந்து போராட்டம் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் ஐயப்ப பக்தர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்து வருகின்றனர்.இந்நிலையில் சபரிமலை நிர்வாகித்து வரும் தேவசம் போர்டு சபரிமலை கோவிலுக்குள் செல்ல செய்தியாளர்கள், சமூக ஆர்வலர்களுக்கு அனுமதியில்லை மேலும் அந்த 2 பெண்களையும் வெளியேற உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் அந்த 2 பெண்களையும் பம்பைக்கு திருப்பி அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் சபரிமலை கோயிலுக்கு செல்லும் இரு பெண்கள் ஐதராபாத்தை சேர்ந்த மோஜோ தொலைக்காட்சியில் செய்தியாளராக கவிதா பணியாற்றி வருகிறார் .
செய்தியாளர் கவிதாவுடன் செல்வது பெண்ணியவாதி ரஹானா பாத்திமா என ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.இந்நிலையில் பக்தர்கள் அல்லாதவர்கள்,செய்தியாளர்கள், சமூக ஆர்வலர்களுக்கு சபரிமலைக்கு வர அனுமதியில்லை என்று தேவசம் தெரிவித்துள்ளது.
இது குறித்து தேவசம் போர்டு அமைச்சர் கடம்பவள்ளி சுரேந்திரன் தெரிவிக்கையில் கேரள அரசின் நோக்கம் பத்திரிக்கையாளர்களின் உரிமையை பாதுகாப்பதே தவிர போராட்ட எண்ணமுடையவர்களை அனுமதிப்பதல்ல மேலும் இதில் 2 பெண்களில் ஒருவர் செய்தியாளர் மற்றொருவர் போராட்ட எண்ணமுடையவர் இது லட்சக்கணக்கான பக்தர்களின் உண்ர்வை பாதிக்கும் என்றும் ஆகையால் இந்த உத்த்ரவு பிறப்பிக்கப்பட்டது தெரிவித்துள்ளார்.
DINASUVADU