BREAKING NEWS:காஷ்மீரில் உடனடியாக ஆளுநர் ஆட்சி அமலுக்கு வந்தது!
ஜம்மு- காஷ்மீரில் ஆளுநர் ஆட்சிக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்தார். குடியரசுத் தலைவரின் ஒப்புதலை தொடர்ந்து காஷ்மீரில் உடனடியாக ஆளுநர் ஆட்சி அமலுக்கு வந்தது.ஆளுநர் வோராவின் ஆட்சிக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.
முன்னதாக ஜம்மு-காஷ்மீர் மெஹபூபா முப்தி கட்சியுடனான கூட்டணியை முறித்துக்கொண்டது பாஜக. கூட்டணி முறிவு தொடர்பான அறிவிப்பை பாஜக பொறுப்பாளர் ராம் மாதவ் வெளிட்டார்.
காஷ்மீர் மாநிலத்தில் பாஜகவுடன் கூட்டணி ஆட்சி செய்து வரும் முதல்வர் மெகபூபா முப்தி ஆட்சி செய்துவந்தது.
காஷ்மீரில் மக்கள் ஜனநாயக கட்சி மற்றும் பாஜக கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. மெகபூபா முப்தி முதல்வராகவும், துணை முதல்வராக பாஜகவின் நிர்மல் குமார் சிங் பதவி வகித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது .
மேலும் 87 எம்.எல்.ஏ.க்கள் கொண்ட பேரவையில் ஆளும் மஜ.க.வுக்கு 28, பாஜக 25 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.போர் நிறுத்தத்தை தொடருவதில் பாஜக, மஜக இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
எனவே பிடிபி கட்சிக்கான ஆதரவை பாஜக வாபஸ் பெற்றதால் ஜம்மு-காஷ்மீரில் ஆட்சி கவிழ வாய்ப்பு உள்ளது. 87 எம்.எல்.ஏக்கள் கொண்ட பேரவையில் பாஜகவுக்கு 25, பிடிபி கட்சிக்கு 28 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். காஷ்மீரில் பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க பிடிபி கட்சிக்கு 44 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தேவைப்படுகிறது.
பாஜக பொறுப்பாளர் ராம் மாதவ் கருத்து:
இது குறித்து பாஜக பொறுப்பாளர் ராம் மாதவ் கூறுகையில், அண்மைக்காலமாக காஷ்மீரில் நிலவும் சூழல் காரணமாக இரு கட்சிகளிடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டது .பயங்கரவாதம்,வன்முறை,பத்திரிகையாளர் சுடப்பட்டது உள்ளிட்ட நிகழ்வுகள் கூட்டணியை பாதித்தது. காஷ்மீரில் அமைதி நிலவவே பிடிபியுடன் கூட்டணி வைத்தோம். ஆனால் அது நடக்கவில்லை என ராம் மாதவ் தெரிவித்தார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் கருத்து:
ஜம்மு-காஷ்மீரில் பிடிபியுடன் சேர்ந்து ஆட்சி அமைக்க மாட்டோம் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.
மேலும் பாஜக தனது தவறை ஒத்துக் கொண்டுள்ளது மகிழ்ச்சியாக உள்ளது. பிடிபி -பாஜக கூட்டணி ஆட்சி தோற்றுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.