BREAKING NEWS:காணமல் போன காங்.எம்.எல்.ஏக்கள்!பாஜகவை சந்தேகப்படும் காங்கிரஸ் !என்னதான் அவர்களின் நிலை ?
கடத்தப்பட்டதாக கூறப்பட்ட விஜயநகர் தொகுதி ஆனந்த் சிங், மஸ்கி தொகுதி பிரதாப் கவுடாஆகிய எம்.எல்.ஏக்கள் பதவியேற்க வரவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது.
இன்னும் சற்று நேரத்தில் சட்டப்பேரவை கூட்டப்பட்டு, புதிய எம்.எல்.ஏக்கள் பதவியேற்க உள்ளனர். அவர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க தற்காலிக சபாநாயகராக கே.ஜி.போப்பையாவை ஆளுநர் வஜூபாய் வாலா நியமனம் செய்துள்ளார்.
எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்றபின், மாலை 4 மணிக்கு சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது. 112 எம்.எல்.ஏக்களின் ஆதரவு இருந்தால் மட்டுமே எடியூரப்பா அரசு தப்பும். பாஜகவுக்கு 104 எம்.எல்.ஏக்கள் மட்டுமே உள்ள நிலையில், எதிர் அணியில் இருந்து 8 பேர் கட்சி அவருக்கு ஆதரவு அளிக்க வேண்டும். அல்லது 15 எம்.எல்.ஏக்கள் சட்டமன்றத்திற்கு வராமல் தவிர்த்துவிட்டாலும் எடியூரப்பா அரசுக்கு ஆபத்து நீங்கும்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.