BREAKING NEWS:காங்கிரஸ் எம்எல்ஏ-விடம் பேரம் பேசிய எடியூரப்பா!பரபரப்பு ஆடியோவை வெளியிட்ட காங்கிரஸ்!
காங்கிரஸ் எம்எல்ஏ பி.சி பாட்டீலிடம் முதலமைச்சர் எடியூரப்பா பேரம் பேசியதாக ஆடியோ வெளியீடப்பட்டது. கொச்சிக்கு செல்லாமல் இருந்தால் அமைச்சர் பதவி தருவதாக எடியூரப்பா பேரம் பேசியதாக குற்றச்சாட்டப்பட்டுள்ளது .நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில் 3வது பேர ஆடியோவை வெளியிட்டது காங்கிரஸ் கட்சி.
Audio of Yeddyurappa trying to bribe Congress MLA BC Patil released. Shameless Yeddyurappa doing horse trading openly. pic.twitter.com/HyPAzzpN7t
— Srivatsa (@srivatsayb) May 19, 2018
இதற்கு முன் :
பாஜக மீது, கர்நாடக சட்டப்பேரவையில் வாக்கெடுப்புக்கு இன்னும் சில மணிநேரங்கள் மட்டுமே உள்ள நிலையில் காங்கிரஸ் எம்எல்ஏ பரபரப்பு புகார் கூறியுள்ளார். பாஜகவினர் தனது மனைவி மூலமாக எடியூரப்பாவிற்கு வாக்களிக்ககோரி பேரம் நடத்தியதாக காங்கிரஸ் எம்எல்ஏ வி.எஸ். உகரப்பா கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில் ‘‘பாஜக எம்எல்ஏ விஜயேந்திரா, எனது மனைவியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். எனக்கு அமைச்சர் பதவியும், 15 கோடி ரூபாய் பணமும் கொடுப்பதாக எனது மனைவியிடம் பேரம் பேசியுள்ளார். எனவே பாஜக எம்எல்ஏ விஜேயேந்தர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ எனக் கூறினார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.