Categories: இந்தியா

BREAKING NEWS:கர்நாடக சட்டப்பேரவை முன்பு நடக்கும் காங். எம்எல்ஏக்களின் தர்ணா போராட்டத்தில் மதசார்பற்ற ஜனதா தள எம்எல்ஏக்களும் பங்கேற்பு!

Published by
Venu

தற்போது கர்நாடக சட்டப்பேரவை முன்பு நடக்கும் காங். எம்எல்ஏக்களின் தர்ணா போராட்டத்தில் மதசார்பற்ற ஜனதா தள எம்எல்ஏக்களும் பங்கேற்ற்றுள்ளர்.

 

இதேபோல் எடியூரப்பா முதலமைச்சரானதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக சட்டப்பேரவை வாயிலில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள், தலைவர்கள் தர்ணா ஈடுப்பட்டுள்ளனர்.

எடியூரப்பாவுக்கு ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக சட்டப்பேரவையில் உள்ள காந்தி சிலை முன்பு முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா மற்றும் காங். தலைவர்கள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.பெரும்பான்மையில்லாத நிலையில் கர்நாடக முதல்வராக எடியூரப்பா பதவியேற்றதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில்  சித்தராமையா, குலாம்நபி ஆசாத், மல்லிகாட்ஜூனே கார்கே, அசோக் கெலாட் உள்ளிட்ட தலைவர்களும் தர்ணாவில் ஈடுபட்டனர்.மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ்- மஜத எம்.எல்.ஏக்கள் முழக்கம் எழுப்பி வருகின்றனர்.தற்போது  காங்கிரஸ் எம்.எல்.ஏக்களும் தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர்.இதில் தற்போது கர்நாடக சட்டப்பேரவை வளாகத்தில் நடக்கும் தர்ணா போராட்டத்தில் மஜத தலைவர் தேவகவுடா பங்கேற்ற்றுள்ளர்.

மஜத கட்சி தலைவர் குமாரசாமி கூறியது:

மஜத கட்சி தலைவர் குமாரசாமி கூறுகையில்,காங்கிரஸ்- மஜத எம்.எல்.ஏக்களுக்கு பாஜக நெருக்கடி கொடுக்கிறது. பிரச்னைகளை காங்கிரசுடன் இணைந்து எதிர்கொள்வோம் .சட்டப்பேரவையிலிருந்து , ஆளுநர் மாளிகைக்கு பேரணியாகச் செல்வோம் என்று மஜத கட்சி தலைவர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியது, பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு அதிகாரத்தை தவறாக பயன்படுத்துகிறது. அமலாக்கத்துறை உள்ளிட்ட துறைகளைப் பயன்படுத்தி எம்.எல்.ஏக்களை மிரட்டுவது, பாஜகவின் வாடிக்கையாக உள்ளது. ஜனநாயகத்தைப் பாதுகாக்க அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்று திரள வேண்டும் என்றும் பாஜகவுக்கு பெரும்பான்மை இல்லாத நிலையில், ஆளுநர் ஏன் எடியூரப்பாவுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்? என்றும்  குமாரசாமி தெரிவித்தார்.

பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு அதிகாரத்தை தவறாக பயன்படுத்துகிறது எங்கள் எம்.எல்.ஏக்களை பாதுகாக்க நாங்கள் திட்டமிட்டுள்ளோம்.எனது தந்தை தேவகவுடாவிடம் நாட்டின் அனைத்து முன்னணி கட்சிகளுடனும் ஜனநாயகத்தை காக்க பேச்சுவார்த்தை நடந்த வேண்டுகிறேன் என்று மஜத கட்சி தலைவர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Published by
Venu

Recent Posts

“பெரியார் என்ன புரட்சி செய்தார்?” – பெரியாா் குறித்து சீமான் மீண்டும் சர்ச்சை பேச்சு!

சென்னை: நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது தந்தை…

1 hour ago

“வீழ்வேன்னு நினைச்சியா? எனக்கு ஒன்னும் இல்லை” அதே கம்பீரத்துடன் விஷால்!

சென்னை: கம்பீர ஹீரோவாக இருந்த நடிகர் விஷாலின் சமீபத்திய தோற்றம், கை நடுக்கம் ஆகியவற்றை பார்த்த பலரும் “அச்சச்சோ என்னாச்சு…

2 hours ago

“என்னுடைய அரசியல் வாழ்க்கையில் ‘வேர்களைத் தேடி’ திட்டம் ஒரு மைல் கல்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

சென்னை:  அயலகத் தமிழர் தினத்தை முன்னிட்டு சென்னை சென்னை நந்தம்பாக்கம், வர்த்தக மையத்தில் நடைபெற்று வரும் ‘அயலகத் தமிழர் தினம்’…

2 hours ago

பொங்கல் வின்னர் மதகஜராஜா? படம் எப்படி இருக்கு? ட்விட்டர் விமர்சனம் இதோ!

சென்னை: 12 வருடங்களுக்கு பிறகு வெளியான சுந்தர்.சி - விஷாலின் 'மதகஜராஜா' படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.…

3 hours ago

“என் வீட்டுக்காரருக்கு திருஷ்டி சுத்திப் போடனும்.. கண்ணு வெச்சிடாதீங்க ப்ளீஸ்..”- நடிகை குஷ்பு கலகல!

சென்னை : மதகஜராஜா திரைப்படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. 12-ஆண்டுகளுக்கு பிறகு இந்த படம்…

4 hours ago

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேர் கைது!

ராமேஸ்வரம்: தமிழ்நாட்டில் இருந்து மீன் பிடிக்க செல்லும் மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடிப்பதாக கூறி இலங்கை கடற்படையினர் சிறை…

5 hours ago