BREAKING NEWS:கர்நாடக சட்டப்பேரவையில் எம்.எல்.ஏக்கள் பதவியேற்பு விழா தொடங்கியது!
கர்நாடக சட்டப்பேரவையில் எம்.எல்.ஏக்கள் பதவியேற்பு விழா தொடங்கி உள்ளது. கர்நாடக சட்டப்பேரவையில் முதல் நபராக எம்.எல்.ஏவாக பதவியேற்றார் எடியூரப்பா.
இன்னும் சற்று நேரத்தில் சட்டப்பேரவை கூட்டப்பட்டு, புதிய எம்.எல்.ஏக்கள் பதவியேற்க உள்ளனர். அவர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க தற்காலிக சபாநாயகராக கே.ஜி.போப்பையாவை ஆளுநர் வஜூபாய் வாலா நியமனம் செய்துள்ளார்.
எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்றபின், மாலை 4 மணிக்கு சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது. 112 எம்.எல்.ஏக்களின் ஆதரவு இருந்தால் மட்டுமே எடியூரப்பா அரசு தப்பும். பாஜகவுக்கு 104 எம்.எல்.ஏக்கள் மட்டுமே உள்ள நிலையில், எதிர் அணியில் இருந்து 8 பேர் கட்சி அவருக்கு ஆதரவு அளிக்க வேண்டும். அல்லது 15 எம்.எல்.ஏக்கள் சட்டமன்றத்திற்கு வராமல் தவிர்த்துவிட்டாலும் எடியூரப்பா அரசுக்கு ஆபத்து நீங்கும்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.