BREAKING NEWS:கர்நாடக சட்டப்பேரவையில் 100% பெரும்பான்மை எனக்குத்தான்!கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா

Default Image

கர்நாடக சட்டப்பேரவையில் 100% பெரும்பான்மையை நான் பெறுவேன் என்று கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், நம்பிக்கை வாக்கெடுப்பு முடிவடையும் வரை எந்தவொரு கொள்கை முடிவையும் எடுக்கக்கூடாது என்றும் விவசாயிகள் மற்றும் மக்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதிகள் குறித்து நாளை தான் முடிவு எடுப்பேன் என்றும்  கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் நாங்கள் வெற்றி பெற போதுமான எம்எல்ஏக்கள் உள்ளனர் என்று கூறினார்.

இந்நிலையில், இன்று காலை 11 மணிக்கு சட்டப்பேரவை கூட்டப்பட்டு, புதிய எம்.எல்.ஏக்கள் பதவியேற்க உள்ளனர். அவர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க தற்காலிக சபாநாயகராக கே.ஜி.போப்பையாவை ஆளுநர் வஜூபாய் வாலா நியமனம் செய்துள்ளார்.

2011ஆம் ஆண்டில் சபாநாயகராக இருந்த போப்பையா, எடியூரப்பாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய 11 எம்எல்ஏ.க்களை தகுதிநீக்கம் செய்ததன் மூலம் ஆட்சியைக் காப்பாற்றியவர் ஆவார். அவையின் மூத்த உறுப்பினரே தற்காலிக சபாநாயகராக நியமிக்கப்பட வேண்டும் என்ற நெறிமுறைக்கு மாறாக போப்பையா நியமிக்கப்பட்டிருப்பதாக காங்கிரஸ் புகார் கூறியுள்ளது .இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு, இன்று காலை 10.30 மணிக்கு விசாரணைக்கு வருகிறது.

எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்றபின், மாலை 4 மணிக்கு சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது. 112 எம்.எல்.ஏக்களின் ஆதரவு இருந்தால் மட்டுமே எடியூரப்பா அரசு தப்பும். பாஜகவுக்கு 104 எம்.எல்.ஏக்கள் மட்டுமே உள்ள நிலையில், எதிர் அணியில் இருந்து 8 பேர் கட்சி அவருக்கு ஆதரவு அளிக்க வேண்டும். அல்லது 15 எம்.எல்.ஏக்கள் சட்டமன்றத்திற்கு வராமல் தவிர்த்துவிட்டாலும் எடியூரப்பா அரசுக்கு ஆபத்து நீங்கும்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்