BREAKING NEWS:கர்நாடக சட்டப்பேரவையின் சபாநாயகராக கே.ஜி.போபையாவின் நியமனத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு!காங்கிரஸ் திட்டம்

Default Image

கர்நாடக சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகராக கே.ஜி.போபையாவின் நியமனத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது.

கர்நாடக எம்எல்ஏக்களில் மூத்த உறுப்பினராக எங்கள் கட்சியை சேர்தவர் இருக்கும் போது கே.ஜி.போபையாவை நியமனம் செய்தது தவறு என்று காங்கிரஸ் தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.

கர்நாடக சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகராக பாஜக எம்எல்ஏ கே.ஜி.போபையாவை நியமித்தார் ஆளுநர்.

கர்நாடக மாநிலத்தின் 23ஆவது முதல்வராக பதவியேற்றார்  எடியூரப்பா:

இந்நிலையில் நேற்று கர்நாடக மாநிலத்தின் 23ஆவது முதல்வராக பதவியேற்றார்  எடியூரப்பா.அதன் பின்  விவசாயிகளின் 56 ஆயிரம் கோடி ரூபாய் அளவுள்ள வங்கிகடன்களை தள்ளுபடி செய்யும் கோப்பில் முதல் கையெழுத்திட்டு பணியை தொடங்கினார். இதன்மூலம் விவசாயிகள் வங்கிகளில் வாங்கிய 5 ஆயிரம் ரூபாய் முதல் 1 லட்சம் ரூபாய் வரையிலான விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்