BREAKING NEWS:கர்நாடக காங்கிரஸ் சட்டமன்றக் குழு தலைவராக பரமேஸ்வரா தேர்வு!
கர்நாடக காங்கிரஸ் சட்டமன்றக் குழு தலைவராக பரமேஸ்வரா தேர்வு செய்யப்பட்டுள்ளார் .ஈகிள்டன் விடுதியில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் பரமேஸ்வரா தேர்வு செய்யப்பட்டுள்ளார் .தற்போது கர்நாடக காங்கிரஸ் கமிட்டி தலைவராக பரமேஸ்வரா உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
எடியூரப்பாவுக்கு ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக சட்டப்பேரவையில் உள்ள காந்தி சிலை முன்பு முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா மற்றும் காங். தலைவர்கள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.பெரும்பான்மையில்லாத நிலையில் கர்நாடக முதல்வராக எடியூரப்பா பதவியேற்றதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் சித்தராமையா, குலாம்நபி ஆசாத், மல்லிகாட்ஜூனே கார்கே, அசோக் கெலாட் உள்ளிட்ட தலைவர்களும் தர்ணாவில் ஈடுபட்டனர்.மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ்- மஜத எம்.எல்.ஏக்கள் முழக்கம் எழுப்பி வருகின்றனர்.தற்போது காங்கிரஸ் எம்.எல்.ஏக்களும் தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர்.இதில் கர்நாடக சட்டப்பேரவை வளாகத்தில் நடக்கும் தர்ணா போராட்டத்தில் மஜத தலைவர் தேவகவுடா பங்கேற்ற்றுள்ளார்.மேலும் கர்நாடக சட்டப்பேரவை முன்பு நடக்கும் காங். எம்எல்ஏக்களின் தர்ணா போராட்டத்தில் மதசார்பற்ற ஜனதா தள எம்எல்ஏக்களும் பங்கேற்றனர்.
இதேபோல் கர்நாடகாவில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தங்கியுள்ள ஈகிள்டன் விடுதிக்கான போலீஸ் பாதுகாப்பை நீக்கியது காவல் துறை என்பது குறிப்பிடத்தக்கது..
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.