BREAKING NEWS:கர்நாடக ஆளுநர் வஜூபாய் வாலாவிடம், ராஜினாமா கடிதத்தை வழங்கினார் எடியூரப்பா!

Default Image

கர்நாடக ஆளுநர் வஜூபாய் வாலாவிடம், ராஜினாமா கடிதத்தை வழங்கினார் பாஜகவின்  எடியூரப்பா.

இதற்கு முன்  முதலமைச்சர் பதவியில் இருந்து எடியூரப்பா ராஜினாமா செய்தார்.

எடியூரப்பா கூறிய உரை: 

பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத காரணத்தினால் முதலமைச்சர் பதவியில் இருந்து விலகுகிறேன்.பெரும்பான்மைக்கு தேவையான எம்.எல்.ஏக்களின் ஆதரவை பெறமுடியவில்லை.

56 மணி நேரத்தில் முதலமைச்சர் பதவியில் இருந்து விலகினார் எடியூரப்பா:

பதவி ஏற்ற 56 மணி நேரத்தில் முதலமைச்சர் பதவியில் இருந்து விலகினார் எடியூரப்பா.104 எம்.எல்.ஏக்களின் ஆதரவு மட்டுமே இருந்த காரணத்தினால் எடியூரப்பா பதவி விலகினார்பெரும்பான்மைக்கு 111 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தேவை என்ற நிலையில் 104 எம்.எல்.ஏக்களின் ஆதரவு மட்டுமே எடியூரப்பாவுக்கு இருந்தது.எடியூரப்பா பதவி விலகியதை தொடர்ந்து காங்கிரஸ் – மதச்சார்பற்ற ஜனதா தளம் அரசு கர்நாடகாவில் அமைய வாய்ப்புள்ளது .எடியூரப்பா பதவி விலகியதால் குமாரசாமியை ஆட்சி அமைக்க வருமாறு ஆளுநர் அழைக்க வாய்ப்புள்ளது .ஆளுநர் வஜுபாய் வாலாவை நேரில் சந்தித்து ராஜினாமா கடிதத்தை வழஙகுகிறார் எடியூரப்பா.எடியூரப்பாவிடம் ராஜினாமா கடிதத்தை பெற்ற பிறகு, குமாரசாமியை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுப்பார்.முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக எடியூரப்பா கூறியதால் சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவில்லை.முதலமைச்சர் பதவியில் இருந்து விலகுவதாக கூறிவிட்டு சட்டப்பேரவையில் இருந்து வெளியேறினார் எடியூரப்பா.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

LIVE NEWS TAMIL
Aavin milk - Heavy rain
Rohini (13) (1)
TN Weather Update
heavy rain
Mumbai Taj Attack
Southwest Bay of Bengal