Categories: இந்தியா

BREAKING NEWS:கர்நாடகாவை தொடர்ந்து பீகாரிலும் பாஜகவிற்கு ஆப்பு! தேஜஸ்வி யாதவ் ஆட்சி அமைக்க அழைக்குமாறு ஆளுநரிடம் மனு!

Published by
Venu

தேஜஸ்வி யாதவ் மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா கூட்டணி தலைவர்கள் பீகார் ஆளுநர் சத்யபால் மாலிக்கை சந்தித்து கடிதம் அளித்தனர்.

கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதாதளம்,காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணிக்கு மொத்தம் 117 இடங்கள் உள்ள போது தனிபெரும் கட்சியாக வெற்றி பெற்ற பாஜகவை ஆட்சியமைக்க கவர்னர் வாஜுபாய் வாலா அழைத்ததையடுத்து கோவா, பிஹார் ஆகிய மாநிலங்களிலும் மாற்றங்கள் கோரப்பட்டது.

காங்கிரஸ் கோவா கிளையும், பிஹாரின் ராஷ்ட்ரிய ஜனதாதளமும் இதே காரணத்தைக் காட்டி தங்களும் ஆட்சியமைக்கத் தகுதியானவர்கள்தான் என்று கோரிக்கை எழுப்பி வருகின்றனர்.

கோவாவில் காங்கிரஸும் பிஹாரில் ராஷ்ட்ரிய ஜனதாதளமும் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றன.

கோவாவில் 2017-ல் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களில் வென்றது. இன்று கர்நாடகாவுக்கு ஒரு விதி எங்களுக்கு ஒரு விதியா என்று கோவா காங்கிரஸ் தலைவர் சந்திரகாந்த் கவ்லேக்கர் கூறியுள்ளார். அதாவது நாளை கோவா ஆளுநர் மிருதுலா சின்ஹாவிடம் தனது 16 எம்.எல்.ஏ.க்கள் கையெழுத்துடன் கடிதம் அளிக்கப்போகிறேன் என்றார்.

அதே போல் நேற்று  பிஹாரில் ராஷ்ட்ரிய ஜனதாதள எம்.எல்.ஏ. தேஜஸ்வி யாதவ், தன் ட்விட்டர் பக்கத்தில் “பிஹாரில் நாங்கள் தனிப்பெரும் கட்சி மட்டுமல்ல, பிஹாரின் தேர்தலுக்கு முந்தைய மிகப்பெரிய கூட்டணியுமாவோம். ஏன் எங்களை ஆட்சியமைக்க அழைக்கக் கூடாது? என்று கேட்டுள்ளார்.

இந்நிலையில் தற்போது தேஜஸ்வி யாதவ் மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா கூட்டணி தலைவர்கள் பீகார் ஆளுநர் சத்யபால் மாலிக்கை சந்தித்து கடிதம் அளித்தனர். அதில், தனிப்பெரும்பான்மையான தங்கள் கட்சியை ஆட்சியமைக்க அழைக்குமாறு கூறப்பட்டிருந்தது.

 

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Recent Posts

எங்க டீமுக்கு வாங்க ப்ரோ! யுவராஜ் சிங்குக்கு ஸ்கெட்ச் போடும் 3 அணிகள்!

எங்க டீமுக்கு வாங்க ப்ரோ! யுவராஜ் சிங்குக்கு ஸ்கெட்ச் போடும் 3 அணிகள்!

டெல்லி : ஐபிஎல் போட்டிகளில் இந்தியாவின் அதிரடி ஆட்டக்காரர் யுவராஜ் சிங் வீரராக விளையாடவில்லை என்றாலும் அணிக்குப் பயிற்சியாளராக வருவாரா?…

51 mins ago

ஹெலிகாப்டர் செல்ல அனுமதி மறுப்பு! 1 மணி நேரம் காத்திருந்த ராகுல் காந்தி!

ஜார்க்கண்ட் : காங்கிரஸ் எம்பியும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியின் ஹெலிகாப்டர் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டின் (ஏடிசி) அனுமதி…

2 hours ago

கார்த்திகை ஸ்பெஷல் அப்பம் செய்வது எப்படி?. எளிமையான செய்முறை விளக்கங்கள்..

சென்னை -திருக்கார்த்திகை ஸ்பெஷல் அப்பம் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; வெல்லம் =முக்கால்…

2 hours ago

300 கோடி வசூலை நெருங்கும் அமரன்…எப்போது ஓடிடியில் வெளியாகிறது தெரியுமா?

சென்னை : சிவகார்த்திகேயன் நடிப்பில் அமரன் படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான நிலையில், வெளியாகி 15 நாட்களைக் கடந்து…

2 hours ago

“பேச்சுவார்த்தை நடத்துங்கள்.!” ஜெயம்ரவி விவகாரத்து வழக்கில் நீதிமன்றம் ஆணை.!

சென்னை : நடிகர் ஜெயம் ரவிக்கும் - ஆர்த்தி என்பவருக்கும் கடந்த 2009இல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 குழந்தைகள்…

3 hours ago

மீண்டும் சர்ச்சையில் சிக்கிய கிண்டி மருத்துவமனை! இளைஞர் உயிரிழந்ததால் உறவினர்கள் போராட்டம்!

சென்னை : கிண்டி அரசு மருத்துவமனையில், வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்ட இளைஞர் உயிரிழந்ததால் பதற்றம் எழுந்துள்ளது. தீவிர சிகிச்சை…

4 hours ago