கர்நாடகாவில் ரூ.56000 கோடி விவசாய கடன் தள்ளுபடி செய்து முதலமைச்சர் எடியூரப்பா முதல் கையெழுத்திட்டுள்ளார்.
இது பதவி ஏற்ற பின் முதலமைச்சர் எடியூரப்பா முதல் கையெழுத்திட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆளுநர் மாளிகையில் பதவியேற்ற எடியூரப்பா தலைமை செயலகம் வந்து முதலமைச்சர் பணியை தொடங்கினார்.இதில் கர்நாடகாவில் ரூ.56000 கோடி விவசாய கடன் தள்ளுபடி செய்து முதலமைச்சர் எடியூரப்பா முதல் கையெழுத்திட்டுள்ளார். இந்நிலையில் பாஜக எம்.எல்.ஏக்களுடன் பிற்பகல் 3 மணிக்கு ஆலோசனை நடத்துகிறார் முதலமைச்சர் எடியூரப்பா.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தும் நிலையில் பேரவைக்கு வந்தார் எடியூரப்பா பேரவையில் வாயிற்படியை தொட்டு வணங்கி உள்ளே சென்றார் எடியூரப்பா.
சற்று முன்தான் கர்நாடகாவின் 23-வது முதலமைச்சராக பதவியேற்றார் எடியூரப்பா.
கர்நாடகா மாநில முதலமைச்சராக எடியூரப்பா பதவியேற்றார். ஆளுநர் வஜூபாய் வாலா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.லிங்காயத் சமூகத்தை சேர்ந்த பாஜகவின் எடியூரப்பா 3 வது முறையாக கர்நாடக முதலமைச்சராகியுள்ளார் எடியூரப்பா.ஆனால் கர்நாடகத்தில் எடியூரப்பாவுடன் அமைச்சர்கள் யாரும் பதவியேற்கவில்லை.
இந்நிலையில் கர்நாடக சட்டப்பேரவையில் பாஜக பெரும்பான்மையை நிரூபிக்கும் என்று மத்திய அமைச்சர் அனந்தகுமார் தெரிவித்துள்ளார்.
இதேபோல் பதவியேற்பு விழாவில் மத்திய அமைச்சர்கள் ஜே.பி.நட்டா, தர்மேந்திர பிரதான், பிரகாஷ் ஜவடேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : தேசிய தேர்வு முகமை கடந்த ஆண்டு இறுதியில் ஜனவரி 15, 16 தேதிகளில் மத்திய அரசின் தேசிய தேர்வு…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஏற்கனவே, மத்திய அரசு நிதி சரியாக வழங்கவில்லை என முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியிருந்த நிலையில்,…
சென்னை : நாளை தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், அரசியல் தலைவர்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.…
சென்னை : தனுஷ் இயக்கி நடித்து வரும் இட்லிகடை திரைப்படம் வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என கடந்த…
ஜப்பான் : தெற்கு ஜப்பானில் உள்ள கைஷூ பகுதியில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கம் மக்களை பதட்டத்தில் ஆழ்த்தியுள்ளது. 6.8 என்ற ரிக்டர்…
நியூ யார்க : அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் வரும் ஜனவரி 20ஆம் தேதி பதவி ஏற்க போகிறார். அந்த…