BREAKING NEWS:கர்நாடகாவில் திடீர் பரபரப்பு.!சட்டப்பேரவையை 1 கி.மீ தொலைவுக்கு 144 தடை!

Default Image

கர்நாடக சட்டப்பேரவையான விதான்சவுதாவை சுற்றி 1 கி.மீ தொலைவுக்கு 144 தடையுத்தரவு பிறப்பிக்கபட்டது.

இன்று மாலை 4 மணியளவில்,உச்சநீதிமன்ற உத்தரவின்படி, கர்நாடக சட்டப்பேரவையில் எடியூரப்பா நம்பிக்கை வாக்கெடுப்பு கோருகிறார். 104 எம்.எல்.ஏக்களைக் கொண்ட பாஜகவுக்கு, பெரும்பான்மையை நிரூபிக்க எட்டு இடங்கள் தேவைப்படுகின்றன.

Related image

கர்நாடகாவில் தேர்தலுக்கு பின்னர் கூட்டணி அமைத்த காங்கிரசிற்கும், மதசார்பற்ற ஜனதா தளத்திற்கு ஆட்சி அமைக்க வாய்ப்பு கொடுக்க மறுத்த ஆளுநரின் செயலுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. நேற்று இந்த வழக்கை விசாரித்த ஏ.கே.சிக்ரி, எஸ்.ஏ.போப்டே, அசோக் பூஷண் ஆகியோர் அடங்கிய அமர்வு, இன்று மாலை 4 மணிக்கு எடியூரப்பா நம்பிக்கை வாக்கெடுப்பு கோர வேண்டும் என்றும், தற்காலிக சபாநாயகர் இதற்கான வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டது. ரகசிய வாக்கெடுப்பு நடத்தக் கூடாது என்றும், வாக்கெடுப்பு முறை குறித்து தற்காலிக சபாநாயகர் தீர்மானிப்பார் என்று நீதிபதி சிக்ரி கூறினார்.

 Image result for ஆளுநர் வஜூபாய் வாலா

இந்நிலையில், இன்று காலை 11 மணிக்கு சட்டப்பேரவை கூட்டப்பட்டு, புதிய எம்.எல்.ஏக்கள் பதவியேற்க உள்ளனர். அவர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க தற்காலிக சபாநாயகராக கே.ஜி.போப்பையாவை ஆளுநர் வஜூபாய் வாலா நியமனம் செய்துள்ளார்.

2011ஆம் ஆண்டில் சபாநாயகராக இருந்த போப்பையா, எடியூரப்பாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய 11 எம்எல்ஏ.க்களை தகுதிநீக்கம் செய்ததன் மூலம் ஆட்சியைக் காப்பாற்றியவர் ஆவார். அவையின் மூத்த உறுப்பினரே தற்காலிக சபாநாயகராக நியமிக்கப்பட வேண்டும் என்ற நெறிமுறைக்கு மாறாக போப்பையா நியமிக்கப்பட்டிருப்பதாக காங்கிரஸ் புகார் கூறியுள்ளது .இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு, இன்று காலை 10.30 மணிக்கு விசாரணைக்கு வருகிறது.

எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்றபின், மாலை 4 மணிக்கு சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது. 112 எம்.எல்.ஏக்களின் ஆதரவு இருந்தால் மட்டுமே எடியூரப்பா அரசு தப்பும். பாஜகவுக்கு 104 எம்.எல்.ஏக்கள் மட்டுமே உள்ள நிலையில், எதிர் அணியில் இருந்து 8 பேர் கட்சி அவருக்கு ஆதரவு அளிக்க வேண்டும். அல்லது 15 எம்.எல்.ஏக்கள் சட்டமன்றத்திற்கு வராமல் தவிர்த்துவிட்டாலும் எடியூரப்பா அரசுக்கு ஆபத்து நீங்கும்.

காங்கிரஸ், மதச்சார்பற்ற எம்எல்ஏக்கள் சிலர் தங்களுடன்தான் இருப்பதாகவும், அவர்கள் ஆதரவின்றி தாங்கள் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாதல்லவா? என்றும் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கர்நாடக சட்டப்பேரவையான விதான்சவுதாவை சுற்றி 1 கி.மீ தொலைவுக்கு 144 தடையுத்தரவு பிறப்பிக்கபட்டது.கர்நாடக பேரவையில் இன்று மாலை 4 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

LIVE NEWS TAMIL
M K Stalin
chicken pox (1)
orange alert tn
CSK Squad
Red Alert TN
Fengal Cyclone