BREAKING NEWS:எடியூரப்பா முதலமைச்சர் பதவி ராஜினாமா!எம்எல்ஏக்களின் ஆதரவு இல்லாததால் திடீர் முடிவு?

Default Image

கர்நாடக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்பே எடியூரப்பா தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல்வெளியாகியுள்ளது. பெரும்பான்மைக்கு தேவையான எம்எல்ஏக்களின் ஆதரவு கிடைக்காது என தெரியவந்தால், எடியூரப்பாவை ராஜினாமா செய்யுமாறு பாஜக மேலிடம் அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

நம்பிக்கை வாக்கெடுப்பு:

உச்சநீதிமன்ற உத்தரவின்படி கர்நாடக சட்டப்பேரவையில் இன்று மாலை 4 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது. சட்டப்பேரவையில் மாலை 4 மணிக்கு, தமது தலைமையிலான அரசின் மீது சட்டப்பேரவை நம்பிக்கை தெரிவிக்கிறது என்ற ஒருவரி தீர்மானத்தை எடியூரப்பா கொண்டுவருவார்.

கர்நாடக சட்டப்பேரவையின் மொத்த உறுப்பினர் பலம் 224. ஆனால் 222 தொகுதிகளுக்கு மட்டுமே தேர்தல் நடைபெற்றது. இதில் 104 தொகுதிகளில் வெற்றிபெற்று பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. காங்கிரஸ் 78 தொகுதிகளில் வென்றுள்ளது. மதச்சார்பற்ற ஜனதா தளம் 37 தொகுதிகளிலும் சுயேட்சைகள் உள்ளிட்ட இதரர்கள் 3 தொகுதிகளிலும் வென்றுள்ளனர்.

மேலும் ராமநகரம் ((Ramangaram)), சென்னப்பட்டணா ((Channapatna)) என்ற 2 தொகுதிகளில் குமாரசாமி வெற்றிபெற்றுள்ளார் என்பதால், தேர்வு செய்யப்பட்டுள்ள எம்எல்ஏ.க்களின் எண்ணிக்கை 221 ஆகக் குறைந்துவிடுகிறது. எனவே சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க 111 எம்எல்ஏ.க்களின் ஆதரவு தேவை. பாஜக 104 எம்எல்ஏ.க்களை பெற்றுள்ள நிலையில், மேலும் 7 எம்எல்ஏ.க்கள் ஆதரவு தேவை.

104 பாஜக எம்எல்ஏ.க்களில் ஒருவரான போப்பையாதான் தற்காலிக சபாநாயகராக நியமிக்கப்பட்டுள்ளார். நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்று ஆதரவாகவும், எதிராகவும் சமஅளவில் வாக்குகள் கிடைக்கும்பட்சத்தில்தான், அவர் வாக்களிக்க அனுமதிக்கப்படுவார். ஆக நம்பிக்கை வாக்கெடுப்பில் முதலில் 220 எம்எல்ஏ.க்கள் மட்டுமே வாக்களிப்பார்கள்.

Image result for bjp karnATAKA

ஒருவேளை, அரசுக்கு ஆதரவாகவும், எதிராகவும் சமமாக 110 வாக்குகள் விழும் பட்சத்தில், தற்காலிக சபாநாயகர் தமது கட்சிக்கு ஆதரவாக வாக்களித்து எடியூரப்பாவை வெற்றிபெறச் செய்வார். இந்த அடிப்படையில் பார்த்தால், தற்காலிக சபாநாயகரை கணக்கில் எடுக்காமல் பாஜக-வுக்கு 103 எம்எல்ஏ.க்கள் உள்ளனர். 110 என்ற எண்ணிக்கையை எட்ட மேலும் 7 எம்எல்ஏ.க்கள் ஆதரவு தேவைப்படுகிறது.

நம்பிக்கை வாக்கெடுப்பின்போது மூன்றுவிதமான நிகழ்வுகள் அரங்கேறினால், எடியூரப்பா வெற்றிபெறுவார். காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தள கட்சிகளை சேர்ந்த 7 எம்எல்ஏ.க்கள் அணி மாறி வாக்களித்தால் எடியூரப்பா அரசு தப்பிவிடும். இதேபோல, காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தள கட்சிகளை சேர்ந்த 14 எம்எல்ஏ.க்கள் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்னர் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்ளாமல் தவிர்த்துவிட்டாலோ அல்லது பதவிப் பிரமாணம் எடுத்த பிறகு ராஜினாமா செய்துவிட்டோலோ, அவையின் பலம் 207 ஆகக் குறைந்து விடும்.

Image result for bjp karnATAKA

அப்போது 104 எம்எல்ஏ.க்களை பெற்றுள்ள பாஜக பெரும்பான்மை பலத்தை பெற்றுவிடும். இதேபோல, காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தள கட்சிகளை சேர்ந்த 14 எம்எல்ஏ.க்கள் வாக்கெடுப்பில் பங்கேற்காவிட்டாலும், 104 எம்எல்ஏ.க்கள் மூலம் பாஜக பெரும்பான்மை பலத்தை நிரூபித்துவிடும். இந்த 3 வாய்ப்புகளிலுமே சம்மந்தப்பட்ட எம்எல்ஏ.க்கள் மீது கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு தகுதியிழப்பு செய்யப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்