Categories: இந்தியா

BREAKING NEWS:எடியூரப்பா முதலமைச்சர் பதவிக்கு தொடங்கியது ஆபத்து?என்னவாகும் எடியூரப்பா முதலமைச்சர் பதவி!

Published by
Venu

எடியூரப்பா முதலமைச்சராக பதவி ஏற்பதற்கு எதிர்ப்பு தெர்வித்து தொடரப்பட்ட வழக்கில் விசாரணை தொடங்கியது.

உச்சநீதிமன்ற வரலாற்றிலேயே அரிதினும் அரிதாக விடிய விடிய விழித்திருந்த 3 நீதிபதிகள் அமர்வு, அதிகாலை 2 மணி முதல் காலை 5.30 மணி வரை விசாரணை நடத்தி, எடியூரப்பா பதவியேற்க தடையில்லை என்ற உத்தரவைப் பிறப்பித்தது. இதன்மூலம் கர்நாடகத்தின் 23வது முதலமைச்சராக எடியூரப்பா நேற்று பதவியேற்றார். யாகூப் மேமன் மும்பைத் தாக்குதல் வழக்கில் தூக்கிலிடப்பட்ட போதும் இதே போன்று உச்சநீதிமன்றம் விடிய விடிய விசாரணை நடத்தியது.

அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த வழக்கில் இரவு முழுக்க காங்கிரஸ் சார்பில் அபிஷேக் சிங்வியும் பாஜக சார்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகியும் மத்திய அரசு சார்பில் அரசு தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபாலும் வாதங்களை முன்வைத்தனர். எடியூரப்பா ஆளுநரிடம் வழங்கிய கடிதத்தின் நகலை இன்று தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், பதவியேற்பு நிகழ்ச்சிக்கு இடைக்காலத் தடை விதிக்க மறுத்துவிட்டது.

இதையடுத்து இன்று காலை 10.30 மணிக்கு மீண்டும் இந்த வழக்கின் விசாரணை நடைபெற்றது.இதில் எடியூரப்பா தரப்பில் வழக்கறிஞர் முகுல் ரோத்தஹி ஆஜரானார்.

இந்நிலையில் இந்த விசாரணையில் கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவுக்கு எம்.எல்.ஏக்களின் ஆதரவு இருக்கிறது என்றும்  ஆளுநரிடம் எடியூரப்பா அளித்த கடிதத்தில் எம்.எல்.ஏக்களின் ஆதரவு இருக்கிறது என்று  பாஜக வழக்கறிஞர் முகுள் ரோஹித்கி  தெரிவித்துள்ளார்.

எடியூரப்பா முதலமைச்சராக பதவி ஏற்பதற்கு எதிர்ப்பு தெர்வித்து தொடரப்பட்ட வழக்கில் விசாரணை தொடங்கியது. கர்நாடக முதலமைச்சராக எடியூரப்பா பதவியேற்றதை எதிர்த்து காங்கிரஸ் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.எடியூரப்பா ஆளுநரிடம் வழங்கிய கடிதத்தின் நகலை இன்று தாக்கல் செய்யப்பட்டது.

பாஜக தரப்பு வழக்கறிஞர் முகுல் ரோஹித்கி 2 கடிதங்களை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தார் . மே 15 ஆம் தேதி அளிக்கப்பட்ட கடிதத்தில் தேர்தலுக்கு முந்தைய கூட்டணி இல்லாததால் பாஜக ஆட்சியமைக்க உரிமை கோரியது.இந்நிலையில்  மே 16 ஆம் தேதி அளிக்கப்பட்ட கடிதத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கத் தேவையான ஆதரவு உள்ளது என்று பாஜக வழக்கறிஞர் முகுள் ரோஹித்கி  தெரிவித்துள்ளார்.

மேலும்  ஆளுநரின் முடிவுக்கு எதிராக தம்மையும் ஒரு வாதியாக சேர்க்குமாறு ராம் ஜெத்மலானி கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Published by
Venu

Recent Posts

இன்று 5 மாவட்டங்களுக்கு கனமழை… 15ம் தேதி தென் மாவட்டங்களுக்கு எச்சரிக்கை.!

இன்று 5 மாவட்டங்களுக்கு கனமழை… 15ம் தேதி தென் மாவட்டங்களுக்கு எச்சரிக்கை.!

சென்னை: கிழக்கு இலங்கைக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…

7 hours ago

“மார்ச் 23ல் ஐபிஎல் தொடர் தொடக்கம்” பிசிசிஐ அறிவிப்பு!

டெல்லி: 2025 ஐபிஎல் தொடர், மார்ச் 23ம் தேதி தொடங்கும் என பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.…

7 hours ago

மகள் – மனைவியுடன் கியூட் உரையாடல்… மகனுடன் வெற்றியை பகிர்ந்து கொண்ட அஜித் குமார்.!

துபாய்: சில நாட்களுக்கு முன்பு, அஜித் கார் விபத்தில் சிக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. தற்போது, இணையதளம் முழுவதும்…

7 hours ago

அதிமுக, தேமுதிக-வை தொடர்ந்து இடைத்தேர்தலை புறக்கணித்த பாஜக!

ஈரோடு: காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதிக்கு…

8 hours ago

கார் ரேஸில் வாகை சூடிய அஜித்… தேசிய கொடியோடு வெற்றி கொண்டாட்டம்! – வைரல் வீடியோ..

துபாய்: நடிகர் அஜித் குமார் சினிமாவை அடுத்து பைக், கார் பந்தயங்களில் அதீத ஈடுபாடு கொண்டவர். தற்போது துபாயில் நடைபெறும்…

9 hours ago

“முதல்வரின் ஆணவம் நல்லதல்ல” முதலமைச்சருக்கு ஆளுநர் மாளிகை கண்டனம்.!

சென்னை: வழக்கமாக ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையோடு தொடங்குவது வழக்கம். தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 6ம் தேதி…

9 hours ago