BREAKING NEWS:எங்களிடம் 8 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் மற்றும் 7 மஜத எம்.எல்.ஏக்கள் உள்ளனர்!திடுக் தகவலை வெளியிட்ட பாஜக தலைவர்
எங்களிடம் 8 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் மற்றும் 7 மஜத எம்.எல்.ஏக்களின் ஆதரவு இருக்கிறது என்று பாஜக தலைவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
உச்சநீதிமன்ற வரலாற்றிலேயே அரிதினும் அரிதாக விடிய விடிய விழித்திருந்த 3 நீதிபதிகள் அமர்வு, அதிகாலை 2 மணி முதல் காலை 5.30 மணி வரை விசாரணை நடத்தி, எடியூரப்பா பதவியேற்க தடையில்லை என்ற உத்தரவைப் பிறப்பித்தது. இதன்மூலம் கர்நாடகத்தின் 23வது முதலமைச்சராக எடியூரப்பா நேற்று பதவியேற்றார். யாகூப் மேமன் மும்பைத் தாக்குதல் வழக்கில் தூக்கிலிடப்பட்ட போதும் இதே போன்று உச்சநீதிமன்றம் விடிய விடிய விசாரணை நடத்தியது.
அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த வழக்கில் இரவு முழுக்க காங்கிரஸ் சார்பில் அபிஷேக் சிங்வியும் பாஜக சார்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகியும் மத்திய அரசு சார்பில் அரசு தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபாலும் வாதங்களை முன்வைத்தனர். எடியூரப்பா ஆளுநரிடம் வழங்கிய கடிதத்தின் நகலை இன்று தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், பதவியேற்பு நிகழ்ச்சிக்கு இடைக்காலத் தடை விதிக்க மறுத்துவிட்டது.
இதையடுத்து இன்று காலை 10.30 மணிக்கு மீண்டும் இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா விவகாரத்தில் உச்சநீதிமன்றம் என்ன முடிவு எடுக்கிறதோ அதை நாங்கள் ஏற்றுக்கொள்வோம் என்றும் எங்களிடம் 8 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் மற்றும் 7 மஜத எம்.எல்.ஏக்களின் ஆதரவு இருக்கிறது என்று பாஜக தலைவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதேபோல் காங்கிரஸ் மற்றும் ம.ஜ.த எம்எல்ஏக்களில் சிலர் கூட பாஜகவுக்கு ஆதரவளிப்பார்கள் என்று உச்சநீதிமன்றத்தில் பாஜக வழக்கறிஞர் முகுல் ரோத்தஹி தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.