BREAKING NEWS:இன்றிரவு 7.30 மணிக்கு ஆளுநரை சந்தித்து கர்நாடகாவில் ஆட்சியமைக்க உரிமை கோருகிறார் குமாரசாமி!
இன்றிரவு 7.30 மணிக்கு ஆளுநரை சந்தித்து கர்நாடகாவில் ஆட்சியமைக்க உரிமை கோருகிறார் குமாரசாமி.
இதற்கு முன் குமாரசாமி கூறியது:
ம.ஜ.த. குமாரசாமி , 5 ஆண்டுகள் கர்நாடகத்தில் நிலையான ஆட்சி தருவேன் என்று உறுதியளித்துள்ளார். 78 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ஆதரவுடன் ஆட்சி அமைக்கிறார் குமாரசாமி. குமாரசாமி தலைமையிலான ம.ஜ.த.வுக்கு வெறும் 37 எம்.எல்.ஏக்கள் மட்டுமே உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆளுநர் அழைக்கும் வரை காத்திருப்போம் என்றும் குமாரசாமி கூறியுள்ளார்.மேலும் கர்நாடக மாநில முதல்வராக குமாரசாமி மே 21ஆம் தேதி மதியம் 12.30 மணிக்கு பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியது:
இதாபோல் மே 21ஆம் தேதி குமாரசாமி முதல்வராக பொறுப்பேற்கும் விழாவுக்கு என்னை அழைத்தார், அவருக்கு என் வாழ்த்துகளை தெரிவித்தேன் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.