ம.ஜ.த. குமாரசாமி , 5 ஆண்டுகள் கர்நாடகத்தில் நிலையான ஆட்சி தருவேன் என்று உறுதியளித்துள்ளார். 78 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ஆதரவுடன் ஆட்சி அமைக்கிறார் குமாரசாமி. குமாரசாமி தலைமையிலான ம.ஜ.த.வுக்கு வெறும் 37 எம்.எல்.ஏக்கள் மட்டுமே உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆளுநர் அழைக்கும் வரை காத்திருப்போம் என்றும் குமாரசாமி கூறியுள்ளார்.
சற்று முன் எடியூரப்பா கூறிய உரை:
பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத காரணத்தினால் முதலமைச்சர் பதவியில் இருந்து விலகுகிறேன்.பெரும்பான்மைக்கு தேவையான எம்.எல்.ஏக்களின் ஆதரவை பெறமுடியவில்லை.
56 மணி நேரத்தில் முதலமைச்சர் பதவியில் இருந்து விலகினார் எடியூரப்பா:
பதவி ஏற்ற 56 மணி நேரத்தில் முதலமைச்சர் பதவியில் இருந்து விலகினார் எடியூரப்பா.104 எம்.எல்.ஏக்களின் ஆதரவு மட்டுமே இருந்த காரணத்தினால் எடியூரப்பா பதவி விலகினார்பெரும்பான்மைக்கு 111 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தேவை என்ற நிலையில் 104 எம்.எல்.ஏக்களின் ஆதரவு மட்டுமே எடியூரப்பாவுக்கு இருந்தது.எடியூரப்பா பதவி விலகியதை தொடர்ந்து காங்கிரஸ் – மதச்சார்பற்ற ஜனதா தளம் அரசு கர்நாடகாவில் அமைய வாய்ப்புள்ளது .எடியூரப்பா பதவி விலகியதால் குமாரசாமியை ஆட்சி அமைக்க வருமாறு ஆளுநர் அழைக்க வாய்ப்புள்ளது .ஆளுநர் வஜுபாய் வாலாவை நேரில் சந்தித்து ராஜினாமா கடிதத்தை வழஙகுகிறார் எடியூரப்பா.எடியூரப்பாவிடம் ராஜினாமா கடிதத்தை பெற்ற பிறகு, குமாரசாமியை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுப்பார்.முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக எடியூரப்பா கூறியதால் சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவில்லை.முதலமைச்சர் பதவியில் இருந்து விலகுவதாக கூறிவிட்டு சட்டப்பேரவையில் இருந்து வெளியேறினார் எடியூரப்பா.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சீனா : கார் ஒட்டிக்கொண்டு சாலையில் வேகமாக செல்லும் போது சில சமயங்களில், சாலைகளில் இருக்கும் மேடு பள்ளங்களை கவனிக்காமல்…
துபாய்: நடிகர் அஜித் குமார் விடாமுயற்சி, குட் பேட் அக்லி படங்களின் படப்பிடிப்பை முடித்துவிட்டு கார் ரேஸில் பங்கேற்க திட்டமிட்டு…
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியின் முக்கிய நிகழ்வான பரமபத வாசல் எனும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இந்த சொர்க்கவாசல்…
சென்னை: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தனியார் பள்ளி கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்து 4 வயது சிறுமி பலியானது பெரும்…
சென்னை : மத்திய அரசு வசூல் செய்யும் ஜிஎஸ்டி வரித்தொகையானது, மாதந்தோறும் மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும். அவ்வாறு இன்று டிசம்பர் மாதம்…
கொல்கத்தா: இந்த மாதம் நடைபெறும் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய வீரர் கே.எல்.ராகுல் பங்கேற்கமாட்டார் என கூறப்படுகிறது.…