முதல்வரை பதவியை திரிவேந்திர சிங் ராவத் ராஜினாமா செய்ததை தொடர்ந்து, புதிய முதல்வராக தீரத் சிங் ராவத் நியமனம்.
இந்தாண்டு இறுதியில் உத்தரகண்ட் மாநிலத்தில் சட்டபேரவை தேர்தல் வர உள்ள நிலையில், அம்மாநில முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். அடுத்த முதல்வராக யார் இருக்கப்போகிறார் என்பது குறித்த ஆலோசனை விரைவில் நடைபெறவுள்ளதாக கூறப்பட்டது.
இந்நிலையில், உத்தராகண்ட் மாநிலம் புதிய முதல்வராக பாஜகவை சேர்ந்த எம்பி தீரத் சிங் ராவத் தேர்தெடுக்கப்பட்டுள்ளார். முதல்வரை பதவியை திரிவேந்திர சிங் ராவத் ராஜினாமா செய்ததை தொடர்ந்து, புதிய முதல்வராக தீரத் சிங் ராவத் நியமனம் செய்யப்பட்டுள்ளது. இன்று மாலை 4 மணிக்கு பதவியேற்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
உட்கட்சி பூசலால் பாஜக தலைமை அதிருப்தியில் இருந்ததால் திரிவேந்திர சிங் ராவத் தனது பதவியை ராஜினாமா செய்ததாக கூறப்படுகிறது. அக்கட்சியில் எம்எல்ஏக்கள், முதல்வர் மீதான குற்றச்சாட்டுக்களை பாஜக தலைமையிடம் புகாரளித்தனர். பின்னர் ஜெ.பி.நட்டாவை முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் சந்தித்தபின், ஆளுநர் பேபி ராணி மயூரியாவிடம் தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடலூர் : அரசு நிலங்களை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுப்பட்ட விவசாயிகள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரை கடலூர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் முதல் போட்டியாக, நாளை (மார்ச் 22) கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் கொல்கத்தா நைட்…
சிவகங்கை : தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களாக கொலை சம்பவங்கள்என்பது அதிகரித்த வண்ணம் இருக்கிறது. நெல்லையில் ஓய்வு பெற்ற எஸ்ஐ…
கலிபோர்னியா : மொபைல் பயனர்கள் பாதுகாப்பாக ஒரு ஆப்-ஐ பதிவிறக்கம் செய்ய நம்பிக்கை மிக்க தளமாக உள்ளது கூகுள் பிளே…
சென்னை : 2026-ல் மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதி மறுசீரமைப்பு செய்யப்படும் என கூறப்படுகிறது. இந்த தொகுதி மறுசீரமைப்பில்…
சென்னை : கடந்த 5 நாட்களாகவே ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்து வந்த நிலையில், இன்று சற்று குறைந்ததால், நகை…