#Breaking:அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி – வானிலை ஆய்வு மையம் தகவல்!
தென்கிழக்கு வங்கக் கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகவுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்கக்கடல் அதை ஒட்டிய நிலநடுக்கோட்டுப் பகுதியில் இன்று புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகவுள்ளதாக வானிலை ஆய்வு மையம் முன்னதாக கணித்திருந்தது.
இந்நிலையில்,தென்கிழக்கு வங்கக் கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகவுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாகலாம் என கணிக்கப்பட்ட நிலையில்,தற்போது அவை காலதாமதமாக உருவாகிறது என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
மேலும்,இன்று முதல் 19.12.2021 வரை தென்மேற்கு வங்காள விரிகுடா மற்றும் அதை ஒட்டிய பூமத்திய ரேகை இந்தியப் பெருங்கடலில் காற்றின் வேகம் மணிக்கு 40-50 கிமீ முதல் மணிக்கு 60 கிமீ வேகம் வரை வீசக்கூடும். குறிப்பிட்ட காலத்திற்கு கடலுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.