#BREAKING: சபரிமலையில் புதிய விமான நிலையம் – நிலம் எடுக்க ஆணை!
சபரிமலையில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்த கேரள அரசு உத்தரவு.
எரிமேலி மற்றும் மணிமலை பகுதிகளில் உள்ள செருவேலி எஸ்டேட்டை விமான நிலையத்துக்காக கையகப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. செருவேலி எஸ்டேட்டில் உள்ள நிலம் உட்பட 2,570 ஏக்கரில் சமரிமலை விமான நிலையம் அமைகிறது. செருவேலி எஸ்டேட் தொடர்பான வழக்கு நிலுவையில் இருப்பதால் நிலம் கையகப்படுத்துவதற்கான தொகையை நீதிமன்றத்தில் செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
செருவேலி எஸ்டேட்டுக்கு அருகில் உள்ள மேலும் 307 ஏக்கர் நிலமும் கையகப்படுத்தப்படுகிறது. சபரிமலைக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக அருகிலேயே புதிய விமான நிலையம் அமைக்கப்படும் என கடந்த 2017-ஆம் ஆண்டு கேரள அரசு அறிவித்திருந்தது. 2018-ல் சர்வதேச டெண்டர் கோரப்பட்டு ஆய்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் தற்போது நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. சபரிமலை விமான நிலையம் கேரளாவின் 5வது விமான நிலையமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.