#BREAKING : செப்.12ம் தேதி நீட் தேர்வு : தேசிய தேர்வுகள் முகமை
மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு எப்போது தொடங்கும் என மாணவர்கள் எதிர்பார்ப்போடு இருந்த நிலையில்,நீட் நுழைவு தேர்வு செப்.12-ம் தேதி நடைபெறும் என தேசிய தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது. மேலும், இதுதொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பை மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் இணையத்தில் வெளியிட்டுள்ளார்.
இதனையடுத்து நீட் தேர்வு விண்ணப்பத்தை நாளை மாலை 5 மணி முதல் இணையதளத்தில் பதிவிறக்கி விண்ணப்பிக்கலாம் என்றும், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த முறை 198 நகரங்களில் நீட் தேர்வு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
To ensure adherence to COVID-19 protocols, face mask will be provided to all candidates at the centre. Staggered time slots during entry and exit, contactless registration, proper sanitisation, seating with social distancing etc. will also be ensured.
— Dharmendra Pradhan (@dpradhanbjp) July 12, 2021