#BREAKING : நீட் நுழைவு தேர்வு முடிவுகள் வெளியீடு..! தமிழக மாணவன் முதலிடம்..!
இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட்நுழைவு தேர்வு முடிவுகள் வெளியீடு.
கடந்த மே மாதம் 7-ஆம் தேதி நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவு தேர்வு நடைபெற்றது. நாடு முழுவதும் சுமார் 20 லட்சம் மாணவர்கள் இந்த தேர்வினை எழுதி இருந்தனர்.
இந்த தேர்வு தேசிய தேர்வு முகமையால் 13 மொழிகளில் நடைபெற்றது. இந்த நிலையில், தற்போது இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட்நுழைவு தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது. மாணவர்கள் நீட் தேர்வின் முடிவுகளை neet.nta.nic.in, ntaresults.nic.in. இணையதளங்களில் பார்க்கலாம்.
இந்த தேர்வில் தமிழகத்தை சேர்ந்த பிரபஞ்சன் 99.99% மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். அதே போல் ஆந்திராவின் போரா வருண் என்ற மாணவனும் முதலிடம் பிடித்துள்ளார். முதல் 10 இடத்தை பிடித்த மாணவர்களில் 4 மாணவர்கள் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தை சேர்ந்த 1.44 லட்சம் மாணவர்களை தேர்வு எழுதிய நிலையில், 78,693 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாநில வாரியாக தேர்ச்சி விகித்ததில், உத்திரபிரதேச மாநிலம் முதலிடத்திலும், மகாராஷ்டிரா இரண்டாம் இடத்திலும், ராஜஸ்தான் மூன்றாம் இடத்திலும் உள்ளது.